பள்ளி இறுதிவரை தமிழ்வழியிலேயே கற்றிருந்தபோதும் கலைச்சொல்லாக்கம் தடுமாற்றமானதகவே உள்ளது.
எனக்கு தெரிந்த சில சொற்களை இங்கு தந்திருக்கிறேன், தமிழாக்கம் தேவைப்படும் சொற்களையும் இணைத்திருக்கிறேன்.
இச்சொற்களில் எதற்கும் பொருத்தமான தமிழ்ச்சொல்லோ, Excel சம்பந்தப்பட்ட வேறு சொற்களோ
நீங்கள் அறிந்திருந்தால் பின்னூட்டத்தில் எழுதிச்செல்லும்படி வேண்டுகிறேன்

Thursday, February 4, 2010

குறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..

எக்ஸெலில் சிலசமயம் workbookகளை பலருக்கு விநியோகித்து அவர்களிடமிருந்து சில தகவல்களைப் ​பெற ​வேண்டியிருக்கும்.

நாம் விநி​யோகிக்கும் ஒர்க்புக்​கை பூட்டி (protect) அனுப்ப ​வேண்டியிருக்கும். ஒர்க்புக்கில் ஏற்கன​​வே உள்ள தகவல்க​ளை (formatting, data ​போன்றவற்​றை)

ஆனால் ஒருசில ​செல்களில் மட்டும் மற்றவர்களிடமிருந்து தகவல் ​சேகரிக்க ​வேண்டியுமிருக்கும்.

அதாவது ஒரு ​வொர்க்-ஷீட்டில் குறிப்பிட்ட ​செல்க​ளை மட்டும் அடுத்தவர் பயன்படுத்த அனுமதிக்க ​வேண்டும். இ​தை இப்படிச் ​செயல்படுத்தலாம்:

1. எந்த ​செல்க​ளை அடுத்தவர் பயன்படுத்த அனுமதிக்க நி​னைக்கிறீர்க​ளோ, அவைக​ளை ​​செலக்ட் ​செய்து ​கொள்ளவும். (உதாரணமாக கீழ்க்கண்ட படத்திலுள்ள மஞ்சள் நிறத்திலுள்ள ​செல்க​ளை ​தேர்ந்​தெடுக்கி​றோம்)


1.2. ஒ​ரே ஒர்க்-ஷீட்டில் ​வெவ்​வேறு இடங்களில் உள்ள ​செல்க​ளை ​தேர்ந்​தெடுக்க ​வேண்டுமானால் Ctrl அழுத்திக் ​கொண்டு ​செல்க​ளை சுட்டி மூலம் ​செலக்ட் ​செய்யலாம்

2. ​மெனுவில் உள்ள Format - Cells ​போகவும்

3. Format Cells ​பெட்டியில் Protection பக்கத்​தை ​தேர்வு ​செய்யவும்

4. அங்குள்ள Locked ​தேர்வு​பெட்டி​​யின்(checkbox) டிக் மார்க்​கை நீக்கவும் (அதாவது uncheck)


5. பின் Tools -> Protection ​​-> Protect Sheet சுட்டவும்


6. பின்வரும் Protect Sheet ​​பெட்டியில் Select locked cells என்ற checkboxயை uncheck ​செய்யவும்

இப்​போது இந்த ஒர்க்-ஷீட்டில் நாம் ​தேர்வு ​செய்த ​செல்களில் மட்டும் பயன்படுத்த முடியும். மற்ற ​செல்க​ளை ​தேர்வு கூட ​செய்யமுடியாது. குறிப்பிட்ட ​செல்க​ளை மட்டும் பயன்படுத்த அனுமதிக்க சாத்தியமாகிறது.

21 comments:

கண்ணா.. said...

எக்ஸெல்லில் மிக முக்கியமானதும் அடிக்கடி எங்கள் அலுவலகத்தில் உபயோகப்படுத்துவதும் இது...

அருமையான விளக்கம்.

நன்றி....

Nathanjagk said...

நன்றி கண்ணா!

நட்புடன் ஜமால் said...

எளிமை. நன்றி.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமை ஜெகா , நல்ல விளக்கங்கள் .

எந்தா சாரே சவுக்கியந்தன்னே !!.

Nathanjagk said...

நன்றி ஜமால்..!

வாங்க ஸ்டார்ஜன்...
சுகந்தன்னே?
நன்றி!

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல‌ சுகம் , என்ன சார் பதிவே எழுதல.

Starjan (ஸ்டார்ஜன்) said...

இன்னும் நிறைய சொல்லித்தாங்க ஜெகா ,

Nathanjagk said...

Starjan,
Pudhu pathivu Kaaladi'la pottache!
...
Welcome.. Let's share what we know.
Thanks!

Menaga Sathia said...

first time here,very nice.thxs for sharing with us!!

Nathanjagk said...

Thanks Sashika..!

இளமுருகன் said...

# கசீ சிவகுமாரின் வலைப்பூ
# அழியாச் சுடர்கள்

அறிமுகப்படுத்தியதர்க்கு மிக்க நன்றி,இப்பக்கங்கள் புதையல் போன்றவை.

இளமுருகன்
நைஜீரியா.

Aathira mullai said...

இது போன்ற செய்திகள்தான் உடனடித்தேவைகளாகத் தெரிந்து கொள்ள வேண்டியது ஜெகநாதன். நல்ல பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..

Anonymous said...

விதவித மான date formatல் உள்ள (உ-ம் us- mm/dd/yyyy மற்றூம் uk-dd/mm/yyyy)தரவுகளை வெவ்வேறு குறுவட்டில் பெற்று ஒன்று சேர்க்கும்போது எந்த ஃபொர்மட்டில் தேதி உள்ளது எனத்(1/3/1998 அல்லது 3/1/1998)தெரியாமலேயே கணக்கீடு செய்வதால் பிரச்சினை உண்டாகிறது.இதை எப்படி தீர்வு செய்வது?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

I use excel all day these days, just figured about this option very recently while sending some confidential information. Good one. Thanks for sharing

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Quick question (may be not a quick one...(-:)
While doing some reconciliation stuff comparing 2 spreadsheets, if there an option to make the program highlight the similar information on both sheets

May be my question is not so clear

For example, when I reconcile GL data with other data I receive from sales and look for any deviations, I know there is a compare option, but is there to compare and highlight(or seperate) similar values in both spreadsheets. Just checking, when you have time. Thanks a bunch

Anonymous said...

Enna Sir Enga Poyetinga என்ன சார் பதிவே எழுதல

ஜானகிராமன் said...

நண்பரே, தொடர்ந்து எக்ஸெல் பற்றி எழுதுங்கள். நிறைய பேருக்கு உதவியாய் இருக்கும்.

உங்கள் கலைச்சொற்கள் நன்றாக உள்ளது. சிலவற்றில் அர்த்தத்தை மேம்படுத்த என்னுடைய கருத்தையும் பகிர்ந்துள்ளேன். பரிசீலிக்கவும்.
Workbook - செயற்புத்தகம்
Worksheet - செயற்தாள்
Function - செயல்பாடு
Reference - முன்பார்வை
Range - நீட்சிநிலை

நட்புடன் ஜமால் said...

பிஸியா இருக்கீங்களோ ...

Anonymous said...

how to protect only one cell? plz ...share with me

நட்புடன் ஜமால் said...

Give some more tips Jegan

சேக்காளி said...

மிகவும் பயனுள்ளதாய் இருந்தது.(இருக்கிறது,இருக்கும்).
நன்றி

Post a Comment