தரவுகள் ஒருங்கிணைப்பில் அதிகமாக பயன்படும் LOOKUP Functionகள் வரிசையில், கடந்த பதிவில் MATCH பற்றி பார்த்தோம் இந்த பதிவில், அதற்கு நெருங்கிய சொந்தமான VLOOKUP குறித்து பார்க்கலாம். உள் நுழையும் முன், அட்டவணை என்பதன் வரையறை குறித்த இப்பதிவை படிக்காதவர்கள், படித்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
VLOOKUP
VLOOKUP ஐ MATCHன் நீட்சி எனக்கூறலாம், MATCH என்பது ஒரு பரிமாண அட்டவணை (List) மீது செயல்படும் ஒரு Function, VLOOKUP இரு பரிமாண அட்டவணை மீது செயல்படுவது.MATCH ஒரு மதிப்பு இருக்கும் இடத்தை (Position) சொல்கிறது, VLOOKUP தேடும் மதிப்பிற்கு தொடர்புடைய மற்றொரு மதிப்பை பெற்று தருகிறது.
VLOOKUP செயல்பாட்டை இப்படி வரையறுக்கலாம்,

"ஒரு அட்டவணையின் முதல் Column இல் ஒரு மதிப்பை தேடி, அது கண்டுபிடிக்கப்பட்ட Row வில் நமக்கு தேவையான Cell ஐ தருகிறது."
சற்றே விரிவாக பார்க்கலாம், முதல் கட்டத்தில், ஒரு இரு பரிமாண அட்டவணையின் முதல் Column இல் ஒரு மதிப்பை தேடுகிறது , உதாரணமாக 'Karthik' எனும் மதிப்பை கீழ்காணும் அட்டவணையில் முதல் Column இல் தேடலாம்,
சற்றே விரிவாக பார்க்கலாம், முதல் கட்டத்தில், ஒரு இரு பரிமாண அட்டவணையின் முதல் Column இல் ஒரு மதிப்பை தேடுகிறது , உதாரணமாக 'Karthik' எனும் மதிப்பை கீழ்காணும் அட்டவணையில் முதல் Column இல் தேடலாம்,

இந்த பட்டியலில் நமக்கு தேவையான Cell எண்ணைக் குறிப்பிட்டால், நமக்கு விடை கிடைக்கும், உதாரணமாக நமக்கு Karthik ன் வயது தெரிய வேண்டுமென்றால், 3 என உள்ளிட வேண்டும்.
எனவே VLOOKUPக்கு நாம் தரவேண்டிய உள்ளீடுகள்,
1. எதை தேட வேண்டும் (LOOKUP value)
தேடப்படும் மதிப்பு, ஒரு எண்ணாகவோ, சொற்றொடராகவோ இருக்கலாம்,
சொற்றொடர்களை நேரடியாக பயன்படுத்தும்போது (String constant) மேற்கோள் (" ") குறியீட்டினுள் தர வேண்டும், (எகா) "Karthik", எங்களுக்கும், Cell Referenceக்கும் இது அவசியமில்லை (எகா) 45, A1
2. எங்கு தேட வேண்டும் (LOOKUP table)
தேட வேண்டிய இடம் என்பது, தேடப்படும் Column ஐ முதலாவதாக கொண்ட ஒரு அட்டவணை, இது ஒரு முழு அட்டவணையாக இருக்கவேண்டிய அவசியமில்லை, ஒரு பெரிய அட்டவணையின் பகுதியாக இருக்கலாம். உதாரணமாக, கீழ்காணும் அட்டவணையில் (A1 : C6) "Karthik" வயதை கண்டறிவதற்கு, நாம் (B2 : C6) என்ற உள் அட்டவணையை தேர்வு செய்ய வேண்டும், Excel ஐ பொறுத்தவரை A1 : C6 தான் அட்டவணை என்றபோதும், VLOOKUP ஐ பொறுத்தவரை B2 : C6 ஒரு முழுமையான அட்டவணை தான்
E | F | |
---|---|---|
3 | karthik | 38 |
4 | 37 | |
5 | Meera |
Worksheet Formulas
|

3. தேடப்படும் மதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட Rowவில், எந்த cell வேண்டும்
தேடப்படும் Column ஐ 1 எனக்கொண்டு, அதன் வலதுபுறமுள்ள Columnகளை எண்ணிட்டால், நமக்கு தேவையான தரவு இருக்கும் Cell கிடைக்கும்.
4. தேடும் முறை
MATCH இல் குறிப்பிட்டது போலவே, Exact matching மற்றும் தேடப்படும் மதிப்பிற்கு அடுத்த (சிறிய) மதிப்பை பெறவுமாக, இரண்டு வழிகளில் தேடலாம். Exact Match முறையில் தேட 0 அல்லது FALSE உள்ளீடாகதரவேண்டும்.
(எகா)
முந்தைய அட்டவணையில் "Karthik"ன் வயதை கண்டறிய கீழ்க்காணும் Formula பயன்படும்,
E | F | |
---|---|---|
3 | karthik | 38 |
Worksheet Formulas
|
E | F | |
---|---|---|
3 | karthik | #N/A |
Worksheet Formulas
|
VLOOKUP, MATCH பற்றி தெரிந்து கொண்டாயிற்று, அடுத்த பதிவில் இவற்றை எப்படி இணைத்து பயன்படுத்துவது என பார்க்கலாம்.
நன்றி
சங்கர்