பள்ளி இறுதிவரை தமிழ்வழியிலேயே கற்றிருந்தபோதும் கலைச்சொல்லாக்கம் தடுமாற்றமானதகவே உள்ளது.
எனக்கு தெரிந்த சில சொற்களை இங்கு தந்திருக்கிறேன், தமிழாக்கம் தேவைப்படும் சொற்களையும் இணைத்திருக்கிறேன்.
இச்சொற்களில் எதற்கும் பொருத்தமான தமிழ்ச்சொல்லோ, Excel சம்பந்தப்பட்ட வேறு சொற்களோ
நீங்கள் அறிந்திருந்தால் பின்னூட்டத்தில் எழுதிச்செல்லும்படி வேண்டுகிறேன்

Saturday, October 24, 2009

வணக்கம் - முதல் பதிவு

இன்றைய சூழலில் கிட்டத்தட்ட அனைத்து அலுவலகங்களிலும், வேலை செய்வதற்கு சமமாக ஏன் அதைவிட அதிகமாகவே, செய்த வேலையை பற்றிய கணக்கெடுப்பும், அறிக்கைகள் உண்டாக்குவதும் (Reports) படம் போட்டு காட்டுவதும் (Graphs & Charts) முக்கியத்துவம் பெற்று வருகிறது. பெரும்பாலான அலுவலகங்களில் இந்த பணியை செய்ய ஓர் அணியே இருக்கும். (ஆனால் நான் இதுவரை தனிக்காட்டு ராஜா தான்). அரிதாய் ஒன்றிரண்டை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் உபயோகிக்கும் மென்பொருள் Microsoft Excel தான். Excel பற்றி இதுவரை நான் கற்றுக்கொண்டது அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே. Excel குறித்து தமிழில் எழுதப்பட்ட வலைப்பக்கங்களை இதுவரை நான் கடந்து வந்ததில்லை (உங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடலாம்), எனவே இந்த முயற்சி.

அடுத்து, என்னைப் பற்றி, ஒரு நாளின் அலுவல் நேரத்தில் குறைந்தது 90 சதவிதம் MS Excel உடன் செலவிடும் MIS Executive. கடந்த பத்து மாதங்களாய் MrExcel online Forum உறுப்பினர். கடந்த நான்காண்டுகளில் தினசரி அலுவல்கள் உண்டாக்கிய தேவைகளுக்காகவும், என்னைக் கேட்ட நண்பர்களின் சந்தேகங்களை தீர்க்கவும் கற்றுக்கொண்ட விஷயங்களை, முடிந்த அளவு எளிமையாக சொல்லலாம் என தோன்றியதன் விளைவுதான் இந்த வலைப்பூ. MrExcel Forum இல் உலவும் போது சந்திக்க நேர்ந்த தமிழர்களின் எண்ணிக்கை அளித்த நம்பிக்கையும் மற்றொரு காரணம்.

Excel இன் செயல்பாடு குறித்த அடிப்படைகள், Functions, MrExcel Forum மீண்டும் மீண்டும் சந்திக்க நேரும் சில பொதுவான கேள்விகளையும், முடித்தால் VBA பற்றியும் எழுதலாம் என்றிருக்கிறேன்

உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் பின்னூட்டத்தில் கேட்கலாம் அல்லது எனக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்

அனைவரும் வருக, ஆதரவு தருக

9 comments:

பெசொவி said...

"Excel"lent பதிவு

சுசி said...

//கடந்த நான்காண்டுகளில் தினசரி அலுவல்கள் உண்டாக்கிய தேவைகளுக்காகவும், என்னைக் கேட்ட நண்பர்களின் சந்தேகங்களை தீர்க்கவும் கற்றுக்கொண்ட விஷயங்களை, முடிந்த அளவு எளிமையாக சொல்லலாம் என தோன்றியதன் விளைவுதான் இந்த வலைப்பூ//

முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். பதிவ போடுங்க... படிச்சு பயன் அடைகிறோம்....

Sri said...

vaverkathakka muyarchi...paaratukkal

Unknown said...

Hi Shankar,

My best wishes to your new endeavour. Keep rocking!!!

Maheshwaran R K
(Mr.Excel ID: maheshmaxi)

இராகவன் நைஜிரியா said...

உங்களின் இந்த நல்ல முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.

இடுகைகளை எதிர் பார்த்து காத்து இருக்கின்றோம்.

Nathanjagk said...

என்னுடைய விருப்பமான விளையாட்டு மைதானம் MS-Excel! சிலசமயம் எக்ஸெலின் இயலாமைகள், ​​போதாமைகள் எரிச்சலை ஏற்படுத்தினாலும் இன்னும் எளிதான data interpretation ​வேலைக்கு தகுந்த மென்பொருளாகவே இது இருக்கிறது!
உங்களின் இந்த பதிவு உபயோகமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

பாலராஜன்கீதா said...

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

ரௌத்ரன் said...

interesting...thanks :))

priyamudanprabu said...

நன்றி
வாழ்த்துக்கள்
(இப்போ இஎவு 1 மணி எனவே அப்புறம் உங்க பதிவுகளா படிச்சு கருத்து சொல்ல்கிறேன்)

Post a Comment