பள்ளி இறுதிவரை தமிழ்வழியிலேயே கற்றிருந்தபோதும் கலைச்சொல்லாக்கம் தடுமாற்றமானதகவே உள்ளது.
எனக்கு தெரிந்த சில சொற்களை இங்கு தந்திருக்கிறேன், தமிழாக்கம் தேவைப்படும் சொற்களையும் இணைத்திருக்கிறேன்.
இச்சொற்களில் எதற்கும் பொருத்தமான தமிழ்ச்சொல்லோ, Excel சம்பந்தப்பட்ட வேறு சொற்களோ
நீங்கள் அறிந்திருந்தால் பின்னூட்டத்தில் எழுதிச்செல்லும்படி வேண்டுகிறேன்

Friday, November 20, 2009

உங்கள் Excel அறிவை மதிப்பிடலாமா

Excel மீதான உங்கள் ஆளுமையின் அளவை அறிவதற்கு இங்கு ஒரு கருத்து கணிப்பை இணைத்துள்ளேன், நான்கு நிலைகளையும் (Levels) தெரிவுகளாக கொடுத்துள்ளேன். இதனை தமிழ்படுத்த வேண்டுமெனில், தொடக்கநிலை, இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை எனக் கொள்ளலாம் (நமது கல்விமுறையின் படிநிலைகளை மனதில் கொள்க). இந்த நான்கு நிலைகளுக்குமான என்னுடைய விளக்கங்கள் இதோ,

தொடக்க நிலை (Beginner)

Windows சார்ந்த மென்பொருட்களின் செயல்பாடு குறித்த அடிப்படைகளை அறிந்தவர்களை இப்பிரிவில் சேர்க்கலாம், அதாவது கோப்புகளை திறத்தல், தரவுகளை உள்ளிடுதல் (data entry), சேமித்தல், சிறு சிறு எளிய அட்டவணைகளை (Table) உருவாக்குதல் போன்றவற்றை சிரமமின்றி செய்ய இவர்களால் இயலும்.

இந்த நிலையில் இருப்பவர்கள் அறிந்திருக்கக்கூடிய (வேண்டிய) Functions என நான் கருதுவது SUM, COUNT, AVERAGE, ROUND, MIN, MAX.

மேலும் Auto filter பயன்படுத்துவதன் அடிப்படை குறித்தும் அறிந்திருக்க வேண்டும்.

இடைநிலை (Intermediate)

Pivot Table என்றால் என்ன, அத்தனை எப்படி உருவாகுவது, எவ்வாறு தேவைக்கேற்ப மாற்றி அமைப்பது என்பது குறித்து அறிந்திருக்க வேண்டும்.

கொஞ்சம் சிக்கலான Auto Filter பயன்பாடு குறித்து அறிந்திருக்க வேண்டும், அதாவது, இரு நிபந்தனைகளுக்கேற்ப (Conditions) Filter அமைப்பது, இரு மதிப்புகளுக்கு (values) இடைப்பட்ட தரவுகளை தேர்ந்தெடுப்பது.

Data Validation அடிப்படைகள் தெரிந்திருக்க வேண்டும்.

மீண்டும் மீண்டும் செய்யப்படும் (Repeated tasks) வேலைகளுக்காக Macro ஒன்றை எப்படி பதிவு செய்வது (Record Macro) என்பது குறித்தும், பதிவு செய்த Macro-வில் சிறு மாற்றங்கள் செய்வது குறித்தும் அறிந்திருக்க வேண்டும்.

இந்த வகையில் வருபவர்கள் அறிந்திருக்க வேண்டிய Functions,
IF, AND, OR, VLOOKUP, SUMIF, COUNTIF, RANK, LEFT, RIGHT, LEN, CONCATENATE


உயர்நிலை (Advanced)

Array Formula பற்றி அறிந்திருக்க வேண்டும்.

Dependent Data validation போன்ற அடுத்த நிலை கருவிகள் (Tools) குறித்து அறிந்திருக்க வேண்டும்.

Macro Recorder உதவி இன்றி, தானே Macro Code செய்து, இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
நிகழ்வுகளால் தூண்டப்படும் (Event driven) Macro குறித்து அறிந்திருக்க வேண்டும்.

இவர்கள் அறிந்திருக்கவேண்டிய Functions சில,
INDEX, MATCH, OFFSET, SUMPRODUCT, INDIRECT, SUBSTITUTE, ROW, COLUMN, DATE, SMALL, LARGE


மேல்நிலை (Expert)

இந்த நிலை சார்ந்தவர்களை இருவகையாய் பிரிக்க எண்ணுகிறேன், முதல்வகை, VB ப்ரோக்ராமிலிருந்து இறக்குமதி ஆனவர்கள், இவர்களுக்கு Excel ன் உள்ளிணைப்பான (In built) Functions குறித்து அதிகம் தெரியாது. ப்ரோக்ராமிங் கண்ணோட்டத்திலேயே எந்த விஷயத்தையும் அணுகுவார்கள். இவர்களால் பயனாளர் தேவைக்கேற்ற Functions (User defined) உருவாக்க இயலும். மேலும் உள்ளிணைக்கப்பட்ட Functions கூட இவர்களால் மீண்டும் எழுதப்படலாம்.

மற்றொரு வகை, உயர்நிலை திறமையாளர்களின் மேம்பட்ட நிலையினர், உயர்நிலை பயன்பாட்டாளர்களால் பல Functions பயன்படுத்த இயலும் என்றாலும், ஒன்றினுள் ஒன்றாய் கோர்க்கப்பட்ட, சிக்கலான Formulas மேல்நிலை பயனர்களால் தான் உருவாக்க இயலும்.


மேல் குறிப்பிட்ட நிலைகள் தவிர, தங்கள் துறை சார்ந்த Functions பற்றி மட்டும் ஆழமாக கற்றவர்கள், எடுத்துக்காட்டாக, அக்கவுண்ட்ஸ் துறையை சார்ந்தவர்கள் IRR, NPV போன்ற Financial Functions மீது மட்டும் தனி கவனம்செலுத்துவார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நிலைகளும், அதற்கான தகுதிகளும், என் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் அமைந்தவை, இவற்றில் ஏதேனும் கருத்து மாறுபாடுகள் இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.


எழுதுவதாய் முடிவுசெய்து வலைப்பூவும் தொடங்கியபின், எங்கிருந்து எழுத்தை துவக்குவது என்ற குழப்பத்திலேயே மூன்று வாரங்கள் ஓடிவிட்டன. இந்த காலகட்டத்தில் என்னை உற்சாகப்படுத்திய (நைஜீரியா) ராகவனுக்கும், பின்னூட்டமிட்ட அன்பர்களுக்கும் நன்றி. இனி தொடர்ந்து எழுதுவேன்


நன்றி
சங்கர்

13 comments:

gopi said...

தொடர்ந்து எழுதவும், அடுத்த பதிவு எப்பொது வரும் என்றும் சொல்வது நலம்

இராகவன் நைஜிரியா said...

நான் beginner ...

எழுதுங்க... எனக்கு நிறைய தெரிஞ்சுக்கணும்..

சூர்யா ௧ண்ணன் said...

தொடர்ந்து எழுதுங்க...

சூர்யா ௧ண்ணன் said...

உங்கள் பிளாக்கில் வேர்டு வெரிபிகேஷனை நீக்கினால் நன்று...,

வாழ்த்துக்களுடன்,
சூர்யாகண்ணன்

நட்புடன் ஜமால் said...

ஐயா! கற்று கொடுக்க நீங்கள் இருந்தால் கற்றுகொள்ள நாங்கள் இருக்கோம்

விரைவில் பாடம் துவங்குங்கள் - உதாரணங்களும் கொடுங்கள்.

Use google documents for uploading your example files.

Fixup a date on every month - so that we remember and come over.

சுசி said...

நான் தொடக்கநிலையில்....

தொடருங்க.... கத்துக்கிறேன்...

sugirtha said...

என் வேலையிலும் நிறைய excel use பண்ணனும். உங்கள் blog ஒரு நல்ல முயற்சி. நான் Intermediate level ல இருக்கேன். ஆனா அவ்வளவா Macros useபண்ணதில்ல. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

ஜெகநாதன் said...

இதே போன்ற பயன்பாட்டாளர் அளவுகோலை ​வேறொரு பக்கம் படித்திருந்தேன் (User, Power user, VBA Developer, Excel Developer and Professional Excel Developer இப்படியாக - உங்களின் வகைப்படுத்தலும் நன்றாகயிருக்கிறது.
*
எனக்குத் தோன்றுவது,முதல் இரண்டு நிலை பயன்பாட்டாளர்களும் எக்ஸெலின் அனைத்து வகையான formatting, range / worksheet / workbook navigation, data abstraction, interpretation, charting, formulae என்று இவைகளின் பயன்பாட்டின் அளவில் மட்டும் (அனுபவ அறிவு + தொழில் தேவை) வித்யாசப்படுத்துக் கொள்ளப் பட​வேண்டியவர்கள்.
உ.ம். பிவட் டேபிள் பயன்பாடு தெரிந்தவுடன் ஒருவர் இன்டர்மீடியட் நிலைக்கோ அல்லது ஒரு மேக்ரோ எழுதியதும் பவர் யூஸராகவோ உயர்ந்து விட்டார் என்றும் சொல்ல முடியாது.

ஜெகநாதன் said...

எக்ஸெல் ஒரு ஓபன் ப்ளே க்ரவுண்ட்.. ஒரு data analysis-க்காக நீங்கள் மெனக்கெட்டு, மணக்கணக்கில் செய்த வேலையை எக்ஸெல் ​கொஞ்சம் சுலபமாக்கிக் கொடுக்கும். ​தொடக்கநிலைக்காரரை விட இடைநிலை பயன்பாட்டாளர் கொஞ்சம் சீக்கிரம் முடிப்பார்.

ஆனால், இதே data analysis வேலை திரும்பவும் ​செய்ய வேண்டுமானால்.. திரும்பவும் மணிக்கணக்கு.. மெனக்கெடல்! இந்த புள்ளியில்தான் தொடக்க / இடைநிலை பயனர்களுக்கு ​கொட்டாவி, ​கோபம், இன்னோவேஷன், ஆட்டோமேஷன், ​ரெஸிக்னேஷன் போன்ற +வ் / -வ் எண்ணங்கள் உதிக்கின்றன.
இதிலிருந்து அவர்கள்.. ​மேக்ரோ, விபிஎ என்று ​தேடி ஒரு புள்ளியில் நம்மால ஆவாதுடா சாமீ என்று 'ஒரிசினல்' விபிஎ டிவலப்பரை அடைகிறார்கள்.

ஜெகநாதன் said...

நல்ல விபிஎ டிவலப்பர் (எனக்கு தோன்றுவது):
1. மூளையைக் கசக்கி முறுக்கு சுடுவது எப்படி என்று கண்டுபிடிக்கக் கூடாது (don't reinvent wheel)
2. திரும்ப பயன்படுத்துகிற மாதிரியான பாகங்கள் ​அமைக்கத் தெரிய வேண்டும் (reusable)
3. அசல் டேட்டாபேஸுடன் SQLலாக உரையாடத் தெரிந்திருக்க வேண்டும் (எப்போதும் இந்த எக்ஸெல் ஸ்பரட்ஷீட்டின் ஆதிமூலம் ரிஷிமூலம் எது என்ற கேள்வி இருந்துக்கிட்டே இருக்கணும்)
4. முக்கியமா எக்ஸெல் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும் (விபிஎ-வில் Vlookup, Match பயன்படுத்துவதற்கு வித்தியாசம் என்ன என்கிற மாதிரி - அதிமுக்கியமா Vlookup-ங்கிற function இருக்குன்னு ​தெரிஞ்சிருக்கணும்)
5. ஒரு நிலையில்.. இந்த வேலைக்கு எக்ஸெல் ஆவாது.. MS-Access பக்கம் கரை ஒதுங்கிறதுதான் ​ஸேப்டி என்று முடிவெடுக்கத் தெரிந்திருக்க ​வேண்டும் (நீங்கள் எவ்வளவு ப்ரோக்கிராமிங் பண்ணினாலும் எக்ஸெலை ஒரு டேட்டாபேஸாக
மாத்த்த்தவே முடியாதுங்க - எக்ஸெல் எக்ஸெல்தான்)
*
இது இருக்கட்டும்.. உங்களின் சர்வே அடிப்படையில் நீங்கள் ஒரு முடிவுக்கு இந்நேரம் வந்திருப்பீர்கள். இதை அறிய ஆவல். அதாவது, உங்களின் இலக்கு,
Excel 2007 பயனர்களா? அல்லது 2003?
எந்த மாதிரியான பயன்பாட்டாளர்களை கருத்தில் ​கொண்டு எழுதப்​போறீங்க? சிலருக்கு cell formatting, conditional formatting, Auto filter என்றெல்லாம் விளக்கினால் ஹாவ்வ்வ் வந்திரும்; அதற்கென்று ஆரம்பத்திலேயே விலுக்அப், யூஸர் டிபைன்ட் பங்கஷன், க்ளாஸ் மாட்யூல் என்றால் பின்னூட்டம் போட ஆளிருக்காது. அதுக்குத்தான் கேக்கிறேன் உங்கள் நிலைப்பாடு என்ன? ஆர்வத்துடன் நன்றி!

கிருது said...

என் வேலையிலும் நிறைய excel use பண்ணனும். உங்கள் blog ஒரு நல்ல முயற்சி. நான் Intermediate level ல இருக்கேன். ஆனா அவ்வளவா Macros useபண்ணதில்ல. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

இளமுருகன் said...

நிறைய விவரமா எழுதுங்க சார் நாங்களெல்லாம் பிக்கின்ர்ஸ் தான்

suresh said...

இன்னிக்குதான் உங்க பிளாக்குக்கு முதன் முதலா வந்திருக்கேன் ரென்டு நாள்ல எல்லா Post யையும் படிச்சுட்டு அடுத்த பின்னூட்டம் பொடுறேன்
Auto sum, table கொஞ்சம் Calculations தெரியும்

Post a Comment