பள்ளி இறுதிவரை தமிழ்வழியிலேயே கற்றிருந்தபோதும் கலைச்சொல்லாக்கம் தடுமாற்றமானதகவே உள்ளது.
எனக்கு தெரிந்த சில சொற்களை இங்கு தந்திருக்கிறேன், தமிழாக்கம் தேவைப்படும் சொற்களையும் இணைத்திருக்கிறேன்.
இச்சொற்களில் எதற்கும் பொருத்தமான தமிழ்ச்சொல்லோ, Excel சம்பந்தப்பட்ட வேறு சொற்களோ
நீங்கள் அறிந்திருந்தால் பின்னூட்டத்தில் எழுதிச்செல்லும்படி வேண்டுகிறேன்

Monday, December 7, 2009

வி-லுக்கப்பில் கன்காடினேட்டின் பயன்பாடு

விலுக்கப் (VLOOKUP):

வேறு இடத்தில் (வொர்க் ஷீட் / வொர்க்புக்) உள்ள தகவல் பட்டியிலுள்ள (table) குறிப்பிட்ட தகவலை நாம் எதிர்பார்க்கிற காலத்திலிருந்து (column) தேடித் தருகிறது.


உதாரணமாக, உங்களிடம் ஒரு வாடிக்கையாளர் பட்டியல் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். படம்-1ல் காட்டியுள்ளவாறு..
ஒவ்வொரு வாடிக்கையாளரும் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் எவ்வளவு வியாபாரம் கொடுத்துள்ளார் என்பதை அறியவேண்டுமானால், நீங்கள் வேறொரு டேபிளில் தேட வேண்டியிருக்கும். அந்த டேபிள் படம்-2ல் காட்டியுள்ளவாறு என்று வைத்துக் கொள்ளுங்கள்

இந்த இரண்டு டேபிள்களுக்கும் உள்ள பொதுவான அம்சம் வாடிக்கையாளர் எண் மற்றும் பெயர். இவைகளை key index fields என்று சொல்வதுண்டு.


இப்ப நம்ம வேலை சிம்பிள். வாடிக்கையாளர் மன்னார் அன்ட் மன்னார் ​பெயரை பட்டி-2ல் தேடினால் பணவரவு தெரிந்துவிடும்.

தேடுவோமா?


பட்டி-1ல் உள்ள கேள்விக்குறிகளை இந்த பார்முலாவால் நிரப்ப ​வேண்டியதுதான்.

=VLookup(எதைத் தேட?, எங்க போயி தேட?, எந்த காலம், ​தேடறது கிடக்கலேன்னா ஓரளவு அதுமாதிரி இருக்கிற மேட்டரை கொடுக்கலாமா?)

இவ்ளோதான் விலுக்அப்!


நம்ம விஷயத்தில்
=VLookup(பட்டி1-வாடிக்கையாளர் பெயர், பட்டி-2, 5வது காலம், வேணாம்)
=VLookup(C3, Sheet1!$C$3:$G$32,5,0)

இந்த பார்முலா நமக்கு வாடிக்கையாளரின் வியாபாரத் தொகையை காண்பித்துவிடும்தான்..... இருந்தும் ஒரு சிக்கல்!

பட்டி-1 முழுதும் பாத்தீங்கன்னா வாடிக்கையாளர் பெயர்கள் திரும்பவும் வந்திருப்பது ​தெரியும்.. அதாவது ஒரே வாடிக்கையாளர் திரும்பவும் வியாபாரம் பண்ணியிருப்பார். உதாரணமா அரவிந்த பி லிட். கிட்டத்தட்ட 6 ஆர்டர் கொடுத்திருக்காங்க கடந்த 3 மாதங்களில்.. ஒவ்வொரு ஆர்டரும் ​வெவ்வேறு ஆர்டர் எண் மற்றும் தொகை கொண்டது.

இந்த விலுக்கப் முதலில் சிக்குகிற அரவிந்த் பி லிட்டுக்கான ஆர்டர் தொகையை மட்டும் கொடுக்கும்.. அடுத்து வர்ற ஆர்டர்களை விலுக்காது!

இந்த இடத்தில் நம் தேவை வாடிக்கையாளர் பெயரும் + ஆர்டர் எண்ணும் ​சேர்த்து கூட்டாக அடுத்த டேபிளில் (பட்டி-2ல்) ​தேடுவதுதான்

எப்படி?

​போன இடு​கையில் சங்கர் எழுதிய ​டெக்ஸ்ட் பங்கஷன்களில் ஒன்றான கன்காடி​னேட் (concatenate) பயன்படுத்தி..! (விலுக்கப் ​ஒற்​றை காலத்​தை மட்டு​மே இன்​னொரு ​​டேபிளில் ​தேட முடியும் என்ப​தை நி​னைவில் ​கொள்க)

ஆக​வே, வாடிக்​கையாளர் + ஒப்பம் எண் என்ற இரு காலங்க​ளையும் ஒன்றாக்கி விட​வேண்டும்; பட்டி-1 மற்றும் பட்டி-2 இரு இடங்களிலும்.. இப்படி:

பட்டி-1:


பட்டி-2:பின்வரும் விலுக்கப் பங்கஷனில் புதிதாக தயாரித்த வா+ஒ.எண் (இதுதான் இப்ப நமக்கு Compound Index!) காலத்​தை பயன்படுத்த​வேண்டும். இப்​போது வாடிக்​கையாளர் ​பெயர் பலமு​றை வந்திருந்தாலும் ஒப்பம் எண்ணுக்குச் சரியான ​தொ​கை நமக்கு கி​டைத்து விடும்.

டிஸ்கி:

  • குழம்பியவர்கள்.. பின்னூவில் எழுதுங்கள்... ​வேறுமாதிரியான வகையில் எழுதப் பார்க்கி​றேன்.


  • எனக்கு இந்த மாதிரி தமிலீஷ்ஷில் டெக்னிகல் விஷயங்கள் எழுதிப் பழக்கமில்லை. ​table, column, row, cell, value, lookup, worksheet இத்யாதிக​ளை ​மொழி​பெயர்ப்பதற்குள் முழி பிதுங்கிவிடுகிறது.


  • ஏதாவது உப​யோகமான குறிப்புகள் இருந்தால் அள்ளி / கிள்ளித் தரவும். நன்றிகள்!

இந்த மாதிரி ஒரு வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தி, கற்றது Excel-ன் சகஆசிரியனாக்கிய சங்கருக்கு நன்றிகள்..!!!

4 comments:

ஜெகநாதன் said...

சங்கர்,

கடினமான பங்கஷனை என்னால் இயன்ற அளவுக்கு விளக்க முயன்றிருக்கிறேன். அறிந்த நுட்பத்தை எழுதும்​போது​மொழியில் எவ்வளவு வழுக்குகிறோம் என்பதை உணரமுடிகிறது.

பிடித்திருந்தால் வைத்திருக்கவும்.. இல்லாவிட்டால் தூக்கவும் (அல்லது திருத்தி வெளியிடவும்)
என் மெயிலுக்கு உங்கள் ​மெயில் ஐடியை அனுப்பமுடியுமா?

சங்கர் said...

நல்லா இருக்கு ஜகன், தமிழ் உதாரணங்களும் ரொம்ப நல்லா இருக்கு

வீட்டில் கொஞ்சம் ஆணி புடுங்க (உண்மையாகவே) (வீடு மாற்றம்) வேண்டி இருந்ததால் ஒரு வாரமா வலைப்பக்கமே வரமுடியவில்லை,

தமிழ் கலைச்சொல் ஆக்கத்திற்கு எனக்கும் மூச்சு வாங்கத்தான் செய்யுது, Row, Column, Function பெயர்கள் போன்ற விஷயங்களை இப்போதைக்கு இங்கிலிஷிலேயே வைத்துக்கொள்ளலாம்.

+2 கணக்கு மற்றும் கணிப்பொறியியல் (தமிழ்வழி) புத்தகங்களை பரணிலிருந்து தூசிதட்டி எடுத்து வைத்திருக்கிறேன், ஏதாவது தேறுதான்னு பார்க்கலாம்

சுசி said...

//Row, Column, Function பெயர்கள் போன்ற விஷயங்களை இப்போதைக்கு இங்கிலிஷிலேயே வைத்துக்கொள்ளலாம்.//

சங்கரை வழிமொழிகிறேன்.
அப்டியே நீங்க தமிழ்சொல் கண்டுபிடிச்சாலும் இதுக்கு இதுன்னு லைட்டா சொல்லிடுங்க. அப்புறம் நாங்க அகராதிக்கு எங்க போக :)))

விளக்கமா எழுதி இருக்கீங்க ஜெகநாதன். வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

எளிமையாகவே இருக்கு ஜெகநாதன் - நன்றிகள்.

ஆங்கில சொற்களையும் போட்டு வைத்தால் எங்களுக்கு விளங்கிடும் எளிதில்.

Post a Comment