பள்ளி இறுதிவரை தமிழ்வழியிலேயே கற்றிருந்தபோதும் கலைச்சொல்லாக்கம் தடுமாற்றமானதகவே உள்ளது.
எனக்கு தெரிந்த சில சொற்களை இங்கு தந்திருக்கிறேன், தமிழாக்கம் தேவைப்படும் சொற்களையும் இணைத்திருக்கிறேன்.
இச்சொற்களில் எதற்கும் பொருத்தமான தமிழ்ச்சொல்லோ, Excel சம்பந்தப்பட்ட வேறு சொற்களோ
நீங்கள் அறிந்திருந்தால் பின்னூட்டத்தில் எழுதிச்செல்லும்படி வேண்டுகிறேன்

Tuesday, December 8, 2009

எண்ணுதல் யார்க்கும் எளியவாம்

நேத்து சங்கர் எழுதிய டெக்ஸ்ட் பங்கஷனில் நல்லா லெப்ட், ரைட், மிட் எல்லாம் வாங்கிட்டாருன்னு நினைக்கிறேன். இப்ப இந்த பங்கஷன்களின் நடைமுறைப் பயன்பாட்டை ஒரு எளிய உதாரணம் சொல்ல ஆசைப்படுகிறேன்.

அதுதான் எண்ணுதல் யார்க்கும் எளியவாம்! இங்கு எண்ணுதல் என்பது Counting, not thinking!!

அதாவது, எக்ஸெலில் ஒரு செல்லில் உள்ள கமாவால் பிரிக்கப்பட்ட வார்த்தைகளை எண்ணுவது.

உதாரணம் உங்களுக்கு கிடைத்திருக்கிற​வொர்க்புக்கில் (சுசி பின்னூவில் குறிப்பிட்ட படி.. இப்படி தங்கிலீஷிலேயே எழுதலாம் என்று முடிவாயிற்று!) ஒரு காலத்தில் பெயர்கள் ஒரு பட்டியல்​போல் இருக்கலாம்.. அல்லது ஒரு குழுவின் பெயர்கள் கமா(,)வால் பிரிக்கப்பட்டு ஒரே செல்லில் அடைக்கப்பட்டிருக்கும். ஒரு செல்லில் உள்ள பட்டியலில் எத்தனை உறுப்புகள் உள்ளன என எண்ணுவதற்கு இந்த பார்முலா பயன்படும்:

=LEN(B2)-LEN(SUBSTITUTE(B2,",",""))+1(இந்த பார்முலா எப்படி வேலை செய்யுது, சப்ஸ்டிடியூட் பங்ஷன் என்ன என்பதை நிதானமாக பார்க்கலாமே?)


படம் 1ல் உள்ள உதாரணத்தைப் பார்க்கவும்:


இது மாதிரியான கமாவால் பிரிக்கப்பட்ட பட்டியல்கள் (comma delimited list) நம் வேலையில் வர சாத்தியம் உண்டு. இப்போது பட்டியலை எண்ண இந்த பார்முலாவைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.. எளிமையாய் எண்ணுங்கள்!

5 comments:

நட்புடன் ஜமால் said...

மிகவும் தேவையான ஒன்று

நன்றி ஜெகநாதன்.

தாரணி பிரியா said...

புரிந்துக்கொள்ள எளிதாய் சொல்லி இருக்கீங்க நன்றி

Vijay said...

மிக நன்று. தொடரவும்.

ஜெகநாதன் said...

சங்கர்,
Table - அட்டவணை
List - பட்டியல்
Row - நிரை
Column - நிரல்
என்று ​சொல்லிக் ​கொள்ளலாம்.
Cell - ​செல்லாக​வே இருக்கலா​மே?
Workbook​யை Worksheetஐ புத்தகம், தாள் என்று சராசரியான பதங்க​ளைக் ​கொண்டு அழைப்பது பிற்பாடு எழுதும் ​போது குழப்பம் வந்துவிடும்.
பணிநூல், பணிதாள்??? ​வேணாம். முதலில் பரந்த வாசக வட்டத்​தை எட்டும் வ​ரை பரீட்சார்த்த ரீதியான முயற்சிக​ளை ​கொஞ்சம் ஒத்திப்​போடலா​மே என்று இருக்கிறது.
க​லைச்​சொற்கள் ​​டெம்பி​ளேட் மிக உப​யோகமா ஒன்று. அப்படி​யே ​வைத்திருக்கவும்.
​கொஞ்சம் ​​கொஞ்சமா அ​வைக​ளை நடைமுறைப்படுத்தி விடலாம்.
அடுத்து உங்க இடு​கைதான். பட்டாசு கிளப்புங்க!
ஒரு மு​றையான பாடத்திட்டம் மாதிரி வகுத்துக் ​கொண்​டோமானால் ​செயல்பாடு எளிதாக இருக்கும் என்று ​தோன்றுகிறது.

S.A. நவாஸுதீன் said...

எனக்கு தேவையான விஷயம்தான் இது. நன்றி நண்பா.

Post a Comment