1. கடைசியாய் பார்த்த கோப்புகள் (Recent files)
நம்மில் பலருக்கு தினசரி அலுவல்களில் தேவைப்படும் 2. புதிதாய் உருவாக்கும் புத்தகத்தின் (workbook) தாள்களின் (worksheet) எண்ணிக்கை
நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு கோப்பிலும் இயல்பாய் இருப்பது 3 தாள்கள், இதனால் கோப்பின் அளவு (Size) எந்த விதத்திலும் பாதிக்க போவதில்லை எனினும், அவரவர் தேவையையும் சௌகர்யதையும் பொருத்து இந்த எண்ணிக்கை மாறுபடலாம். என்னளவில் எண்ணிக்கை ஒன்று தான், அதற்கு மேற்பட்ட தாள்கள் எரிச்சலை தான் ஏற்படுத்தும், ஆனால் நிதிநிலை அறிக்கை (Budget) தயாரிப்பு போன்ற வேளைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு தேவைப்படும் தாள்கள் அதிகமாய் இருக்கலாம். இந்த எண்ணிக்கையை 1 முதல் 255 வரை வைத்துக்கொள்ளலாம், ஆனால் இந்த கட்டுப்பாடு புதிதாய் புத்தகம் ஒன்றாய் உருவாக்கும் போது மட்டும் தான், அதன்பின் எவ்வளவு தாள்கள் வேண்டுமென்றாலும் சேர்த்துக்கொள்ளலாம்.
3. எழுத்துரு மற்றும் எழுத்தின் அளவு (Font and Font Size)
இயல்பு எழுத்துரு மற்றும் அளவு MS office தொகுப்பில் உள்ள பயன்பாடுகள் ஒவ்வொன்றிலும் மாறுபடும். Excel பொறுத்தவரை இது Arial, 10 point ஆகும். நீங்கள் கையாளும் தரவுகளை பொருத்து இதனை நீங்கள் தகவமைத்துக் கொள்ளலாம் (customize). என்னை பொறுத்தவரை, எழுத்துக்களுக்கு (Text) Verdana எழுத்துருவும், எண்களுக்கு Trebuchet MS எழுத்துருவும் பொருத்தமாய் இருக்கும்
4. கோப்புகள் சேமிக்கும் இடம் (Folder)
நீங்கள் ஒவ்வொரு முறை புதிய கோப்புகளை சேமிக்கவோ (Ctrl + S) , சேமித்த கோப்புகளை திறக்கவோ (Ctrl + O) முயலும் போது My Documents Folderக்குத்தான் செல்லும், இதனை நீங்கள் உங்கள் விருப்பப்பட்ட Folderக்கு மாற்றியமைத்து உங்கள் நேரத்தை மிச்சமாக்கலாம்.
கட்டளை (Command) : Tools -> Options -> Genaral
நன்றி
சங்கர்
டிஸ்கி
பள்ளி இறுதிவரை தமிழ்வழிக்கல்விலேயே பயின்ற போதிலும், கலைச்சொல்லாக்கம் என்பது தடுமாற்றமானதாகவே உள்ளது. இங்கு நான் பயன்படுத்தியிருக்கும் சொற்களுக்கு எளிய மாற்றுச்சொல் தெரிந்தால் கட்டாயம் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.
8 comments:
நன்றி சங்கர்..
ஆரம்பம் சரியாக ஆரம்பித்துள்ளீர்கள். தெரிந்த விச்யமாக இருந்தாலும், படிக்கும் போது புதிதாகத் தெரிகின்றது.
கீப் இட் அப்.
இதே போன்ற பயன்பாட்டாளர் அளவுகோலை வேறொரு பக்கம் படித்திருந்தேன் (User, Power user, VBA Developer, Excel Developer and Professional Excel Developer இப்படியாக - உங்களின் வகைப்படுத்தலும் நன்றாகயிருக்கிறது.
எனக்குத் தோன்றுவது,முதல் இரண்டு நிலை பயன்பாட்டாளர்களும் எக்ஸெலின் அனைத்து வகையான formatting, range / worksheet / workbook navigation, data abstraction, interpretation, charting, formulae என்று இவைகளின் பயன்பாட்டின் அளவில் மட்டும் (அனுபவ அறிவு + தொழில் தேவை) வித்யாசப்படுத்துக் கொள்ளப்படவேண்டியவர்கள்.
உ.ம். பிவட் டேபிள் பயன்பாடு தெரிந்தவுடன் ஒருவர் இன்டர்மீடியட் நிலைக்கோ அல்லது ஒரு மேக்ரோ எழுதியதும் பவர் யூஸராகவோ உயர்ந்து விட்டார் என்றும் சொல்ல முடியாது.
எக்ஸெல் ஒரு ஓபன் ப்ளே க்ரவுண்ட்.. ஒரு data analysis-க்காக நீங்கள் மெனக்கெட்டு, மணக்கணக்கில் செய்த வேலையை எக்ஸெல் கொஞ்சம் சுலபமாக்கிக் கொடுக்கும். தொடக்கநிலைக்காரரை விட இடைநிலை பயன்பாட்டாளர் கொஞ்சம் சீக்கிரம் முடிப்பார்.
ஆனால், இதே data analysis வேலை திரும்பவும் செய்ய வேண்டுமானால்.. திரும்பவும் மணிக்கணக்கு.. மெனக்கெடல்! இந்த புள்ளியில்தான் தொடக்க / இடைநிலை பயனர்களுக்கு கொட்டாவி, கோபம், இன்னோவேஷன், ஆட்டோமேஷன், ரெஸிக்னேஷன் போன்ற +வ் / -வ் எண்ணங்கள் உதிக்கின்றன.
இதிலிருந்து அவர்கள்.. மேக்ரோ, விபிஎ என்று தேடி ஒரு புள்ளியில் நம்மால ஆவாதுடா சாமீ என்று 'ஒரிசினல்' விபிஎ டிவலப்பரை அடைகிறார்கள்.
நல்ல விபிஎ டிவலப்பர் (எனக்கு தோன்றுவது):
1. மூளையைக் கசக்கி முறுக்கு சுடுவது எப்படி என்று கண்டுபிடிக்கக் கூடாது (don't reinvent wheel)
2. திரும்ப பயன்படுத்துகிற மாதிரியான பாகங்கள் அமைக்கத் தெரிய வேண்டும் (reusuable)
3. அசல் டேட்டாபேஸுடன் SQLலாக உரையாடத் தெரிந்திருக்க வேண்டும் (எப்போதும் இந்த எக்ஸெல் ஸ்பரட்ஷீட்டின் ஆதிமூலம் ரிஷிமூலம் எது என்ற கேள்வி இருந்துக்கிட்டே இருக்கணும்)
4. முக்கியமா எக்ஸெல் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும் (விபிஎ-வில் Vlookup, Match பயன்படுத்துவதற்கு வித்தியாசம் என்ன என்கிற மாதிரி - அதிமுக்கியமா Vlookup-ங்கிற function இருக்குன்னு தெரிஞ்சிருக்கணும்)
5. ஒரு நிலையில்.. இந்த வேலைக்கு எக்ஸெல் ஆவாது.. MS-Access பக்கம் கரை ஒதுங்கிறதுதான் ஸேப்டி என்று முடிவெடுக்கத் தெரிந்திருக்க வேண்டும் (நீங்கள் எவ்வளவு ப்ரோக்கிராமிங் பண்ணினாலும் எக்ஸெலை ஒரு டேட்டாபேஸாக
மாத்த்த்தவே முடியாதுங்க - எக்ஸெல் எக்ஸெல்தான்)
*
இது இருக்கட்டும்.. உங்களின் சர்வே அடிப்படையில் நீங்கள் ஒரு முடிவுக்கு இந்நேரம் வந்திருப்பீர்கள். இதை அறிய ஆவல். அதாவது, உங்களின் இலக்கு,
Excel 2007 பயனர்களா? அல்லது 2003?
எந்த மாதிரியான பயன்பாட்டாளர்களை கருத்தில் கொண்டு எழுதப்போறீங்க? சிலருக்கு cell formatting, conditional formatting, Auto filter என்றெல்லாம் விளக்கினால் ஹாவ்வ்வ் வந்திரும்; அதற்கென்று ஆரம்பத்திலேயே விலுக்அப், யூஸர் டிபைன்ட் பங்கஷன், க்ளாஸ் மாட்யூல் என்றால் பின்னூட்டம் போட ஆளிருக்காது. அதுக்குத்தான் கேக்கிறேன் உங்கள் நிலைப்பாடு என்ன? ஆர்வத்துடன் நன்றி!
அன்பின் சங்கர்
நான் அனைத்தையும் படிக்க வேண்டும் - தேவைப்படுகிறது. நேரம் இல்லை - விரைவினில் வருகிறேன்
நல்வாழ்த்துகள் நண்பா - நற்பணி சிறக்க வாழ்த்துகள்
உபயோகமானதொரு பதிவு.►தொடர வாழ்த்துக்கள்
எளிமையான துவக்கம்.
நன்றி.
தொடருங்கள் கற்கிறோம் ...
Post a Comment