பள்ளி இறுதிவரை தமிழ்வழியிலேயே கற்றிருந்தபோதும் கலைச்சொல்லாக்கம் தடுமாற்றமானதகவே உள்ளது.
எனக்கு தெரிந்த சில சொற்களை இங்கு தந்திருக்கிறேன், தமிழாக்கம் தேவைப்படும் சொற்களையும் இணைத்திருக்கிறேன்.
இச்சொற்களில் எதற்கும் பொருத்தமான தமிழ்ச்சொல்லோ, Excel சம்பந்தப்பட்ட வேறு சொற்களோ
நீங்கள் அறிந்திருந்தால் பின்னூட்டத்தில் எழுதிச்செல்லும்படி வேண்டுகிறேன்

Tuesday, December 15, 2009

எட்டி எடுக்க (Look up) சில Functionகள் - 1

Excel இல் நமது பயன்பாடுகளில் பெரும்பாலானவற்றை இரு பெரும் வகைபாடுகளுக்குள் அடக்கலாம். ஒன்று, தரவுகளை ஒருங்கிணைத்தல் (Data Integration), மற்றொன்று, ஒருங்கிணைத்த தரவுகளை சுருக்கி (Summarizing) தகவலாய் (Information) மாற்றுதல். முதலாவதாய் வரும் ஒருங்கிணைப்பு என்பது, வெவ்வேறு இடங்களில் இருக்கும் தரவுகளை ஓரிடத்திற்கு கொண்டு வருவதையும் உள்ளடக்கி இருக்கும். இப்படி இரு வேறு இடங்களில் இருக்கும் தரவுகளை, இரண்டுக்கும் பொதுவான ஒரு Column ஐ (Common Reference Field) அடிப்படையாக கொண்டு இணைக்க பயன்படும் Functionகளை எட்டி எடுக்கும் (Lookup) Functionகள் எனலாம். இந்த வகைப்பாட்டினுள் வரும் ஒரு Functionஐ இப்பதிவில் காண்போம்.

MATCH

ஒரு பட்டியலில் (m x 1 or n x 1 table) நாம் தேடும் மதிப்பு (value) உள்ளதா என்பதை கண்டறிய MATCH பயன்படுகிறது. நாம் தேடும் Value பட்டியலில் இருந்தால், பட்டியலின் துவக்கத்திலிருந்து** எத்தனை Cell தாண்டி இருக்கிறது என்ற இடத்தை (Position) விடையாக தரும். பட்டியலில் நாம் தேடும் Value இல்லாதபோது #N/A திட்டு கிடைக்கும்.

உதாரணத்தோடு பார்க்கலாம்,

A
1Name
2Sankar
3Jagan
4Radha
5Karuna
6Raghavan
7Saravanan
8Saradha
9Gomathi
10Vijay




CD
1Name to findPosition
2Raghavan5


Worksheet Formulas
CellFormula
D2=MATCH(C2,A2:A10,0)



MATCH Funtionக்கு மூன்று உள்ளீடுகள் உண்டு,

முதலில், எதை தேடவேண்டும் (Lookup Value)
அடுத்து, எங்கு தேட வேண்டும் (Lookup List),

**தேடவேண்டிய இடம் (Lookup List), நெடுவரிசையாகவோ, கிடைவரிசையாகவோ இருக்கலாம். பட்டியலின் துவக்கம் என்பது, கிடைவரிசையில், இடதுபுறமிருந்து முதல் cellலையும், நெடுவரிசையில், மேலிருந்து முதல் cellலையும் குறிக்கும்.

மூன்றாவதாய், தேடும் முறையை குறிப்பிட வேண்டும் (Search type),

MATCH ஐ பயன்படுத்தி தேடும்போது மூன்று வித முடிவுகளை பெறலாம்.

1. நாம் தேடும் மதிப்பு, பட்டியலில் இருந்தால் மட்டுமே விடை தருவது, (Exact Match)
2. நாம் தேடும் மதிப்பு இல்லாத பட்சத்தில், அதற்கடுத்த, குறைந்த மதிப்பை (highest value, lower than the look up value) தேடுவது
3. நாம் தேடும் மதிப்பு இல்லாத பட்சத்தில், அதற்கடுத்த, உயர்ந்த மதிப்பை (lowest value, higher than the look up value) தேடுவது

Exact match முறையில் தேடுவதற்கு, 0 அல்லது FALSE உள்ளீடாய் தர வேண்டும். (FALSE ,TRUE பற்றி இன்னொரு பதிவு எழுதுகிறேன்), மேலும் இம்முறையில், பட்டியல் வரிசைப்படுத்தப்பட்டிருக்க (Sorting) வேண்டிய அவசியம்இல்லை.

BCDEFGHIJ
13579965236142873389




JK
1Value to findPosition
2234


Worksheet Formulas
CellFormula
K2=MATCH(J2,B13:J13,0)



Exact match முறையில், நாம் தேடும் மதிப்பு பட்டியலில் இல்லாதபோது #N/A திட்டு கிடைக்கும். மற்ற இரண்டு முறைகளை பயன்படுத்துவதை பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்.

கடைசியாக, MATCH Function தனித்து பயன்படும் இடங்களை விட, VLOOKUP, INDEX போன்ற பிற Functionகளுடன் இணைந்து பயன்படும் இடங்களே அதிகம். அது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

நன்றி
சங்கர்

10 comments:

cheena (சீனா) said...

அன்பின் சங்கர்

எளிய முறையில் கற்றுத்தரும் இடுகை

நன்று - நல்வாழ்த்துகள் சங்கர்

நட்புடன் ஜமால் said...

Match - இது வரை அறிந்ததில்லை - மிக்க நன்றி உபயோகித்து பார்க்கின்றேன்.

S.A. நவாஸுதீன் said...

புதிய விஷயம். ரொம்ப நன்றி.

SUFFIX said...

உபயோகமான தகவல்கள். பகிர்விற்க்கு நன்றி.

கண்ணா.. said...

MATCH இதுவரை உபயோகித்தது இல்லை.. vlookup தான் வழக்கமாக உபயோகிப்பேன்.

நல்ல தகவல்.

நல்ல உபயோகமான தளம் உங்களுடையது.

எனக்கு இந்த Macros பற்றி தெரிந்து கொள்ள ஆவல். விரைவில் அது குறித்து எழுதுங்கள்.

இதை இன்னும் பலர் அறிய வேண்டி என்னுடைய ஓட்டுகளும்.

தமிழ்மணத்திலும் இணைத்து விடுங்கள். இன்னும் பலருக்கு தெரியவரும்.

நன்றி

உமா said...

உங்களுடைய blogs எல்லாமே ரொம்ப அழகா இருக்கு. எக்ஸல் மிக பயனுள்ளது. நன்றி,வாழ்த்துக்கள்.

Nathanjagk said...

சங்கர், //தரவுகளை ஒருங்கிணைத்தல் (Data Integration), மற்றொன்று, ஒருங்கிணைத்த தரவுகளை சுருக்கி (Summarizing) தகவலாய் (Information) மாற்றுதல். //
எக்ஸலில் செய்யும் அத்தனை வேலைகளும் இந்த விளக்கத்திற்குள் அடைப்பட்டு போகின்றன.
தகவலாய் மாற்றும் பணியை information visualization (infovis) என்றும் அழைக்கப்படுகிறது.

Nathanjagk said...

Match பங்ஷனில், எதை தேடவேண்டும் (Lookup Value) என்பதில் wildcard (* / ?) characters பயன்படுத்த முடியும்.

உதாரணமா,
=MATCH("*pples",A2:A10,0)
என்று ​சொன்னால் Apples கிடைக்கும்!

Vlookupலிலும் முயற்சிக்கலாம் இதை.

சங்கர் said...

//ஜெகநாதன் said...
Match பங்ஷனில், எதை தேடவேண்டும் (Lookup Value) என்பதில் wildcard (* / ?) characters பயன்படுத்த முடியும். //

இது ஒரு அறிமுகமாய் இருக்கட்டும் என்று தான் சில விஷயங்களை ஒத்திவைத்து எழுதினேன், அடுத்த நிலை பயன்பாடுகளை வேறொரு பதிவில் எழுத உத்தேசம்

Venkatesh said...

sir,
welcome to ur post i would like.

thank you

Post a Comment