பள்ளி இறுதிவரை தமிழ்வழியிலேயே கற்றிருந்தபோதும் கலைச்சொல்லாக்கம் தடுமாற்றமானதகவே உள்ளது.
எனக்கு தெரிந்த சில சொற்களை இங்கு தந்திருக்கிறேன், தமிழாக்கம் தேவைப்படும் சொற்களையும் இணைத்திருக்கிறேன்.
இச்சொற்களில் எதற்கும் பொருத்தமான தமிழ்ச்சொல்லோ, Excel சம்பந்தப்பட்ட வேறு சொற்களோ
நீங்கள் அறிந்திருந்தால் பின்னூட்டத்தில் எழுதிச்செல்லும்படி வேண்டுகிறேன்

Monday, December 14, 2009

அட்டவணை (Table) - ஒரு வரையறை

அட்டவணை என்பதை, கிடை மற்றும் நெடு வரிசைகளின் (Row & Column) தொகுப்பு என்று வரையறுக்கலாம். இங்கு கிடை / நெடு வரிசைகளின் எண்ணிக்கை குறைந்தபட்சம் ஒன்றிலிருந்து துவங்கவேண்டும், அப்படி பார்க்கும்போது

5 நிரை x 3 நிரல் (multiple row, multiple column) ( m x n table) என்பதும்,

10 நிரை x 1 நிரல் (multiple row, single column) (m x 1 table) என்பதும்,

1 நிரை x 7 நிரல் (single row, multiple column) (1 x n table) என்பதும்,

1 நிரை x 1 நிரல் (single row, single column) (1 x 1 table) என்பதும்

அட்டவணை தான்.



வேறு வார்த்தைகளில் சொன்னால்

ஒரு பட்டியலும் (List) (multiple row, single column / single row, multiple column),

ஒரு தனி அறையும் (single cell) (single row, single column)

கூட அட்டவணை என்னும் வகைப்பாட்டில் வரும்.

ஒரு அட்டவணை என்பது இரு பரிமாணம் (Dimension) உடையது, எனினும் Excel ஐ பொறுத்தவரை, பட்டியல் (List) என்பதை, ஒரு பரிமாணம் உடையது என கொண்டால், புரிதல் சற்று எளிதாக இருக்கும்.

Functionகளின் செயல்பாட்டை தெளிவாய் கற்க இந்த புரிதல் அவசியமான ஒன்று.


நன்றி
சங்கர்

6 comments:

cheena (சீனா) said...

அன்பின் சங்கர்

நல்ல முறையில் விளக்கம்

நல்வாழ்த்துகள்

சுசி said...

விளக்கம் நல்லா இருக்கு சங்கர்.

நட்புடன் ஜமால் said...

ஒற்றை பரிமாணம் - சரியாக விளங்குது ...

Nathanjagk said...

சங்கர்,
நிரை - ​ரோ (row)
நிரல் - காலம் (column)
என்று இவைகளின் பயன்பாடு எளிமையாக இருக்கிறது.
கிடைவரிசை, ​நெடுவரிசையை தவிர்த்து விடலாம் என்று நினைக்கிறேன்.

அன்புடன் MK said...

uSEFULL pOST
http://mk-shivamayam.blogspot.com/
http://mk-shivamayam.blogspot.com/

Venkatesh said...

Dear Sankar Good .
I would like oyur blog . because u have many information.

Post a Comment