பள்ளி இறுதிவரை தமிழ்வழியிலேயே கற்றிருந்தபோதும் கலைச்சொல்லாக்கம் தடுமாற்றமானதகவே உள்ளது.
எனக்கு தெரிந்த சில சொற்களை இங்கு தந்திருக்கிறேன், தமிழாக்கம் தேவைப்படும் சொற்களையும் இணைத்திருக்கிறேன்.
இச்சொற்களில் எதற்கும் பொருத்தமான தமிழ்ச்சொல்லோ, Excel சம்பந்தப்பட்ட வேறு சொற்களோ
நீங்கள் அறிந்திருந்தால் பின்னூட்டத்தில் எழுதிச்செல்லும்படி வேண்டுகிறேன்

Monday, December 7, 2009

சில Text Function கள் - 2

1. MID

ஒரு சொற்றொடரின் இடது மற்றும் வலது புறங்களில் இருந்து எழுத்துக்களை வெட்டி எடுப்பது எப்படி என முந்தய பதிவில் பார்த்தோம், ஒரு cell இன் நடுவிலிருந்து Text ஐ பெறுவதற்கு MID Function ஐ பயன்படுத்தலாம். LEFT பயன்படுத்தி இடது புறமிருந்து Text பெறும்போது, எடுக்கவேண்டிய Text இன் தொடங்கு புள்ளி (Starting position) cell இன் முதல் எழுத்தாக இயல்பாகவே அமைந்துவிடுகிறது, நாம் அளிக்கவேண்டிய உள்ளிடு (argument), எத்தனை எழுத்துக்களை எடுக்கவேண்டும் என்பது மட்டும் தான். ஆனால் MID பயன்படுத்தி நடுவிலிருந்து வெட்டி எடுக்கும்போது, எத்தனை எழுத்துக்கள் வேண்டும் என்பதோடு, எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பதையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும். எனவே MID இன் கட்டமைப்பு (Syntax), எந்த Cell இல் இருந்து பெறவேண்டும், எந்த இடத்தில் துவங்க வேண்டும், எத்தனை எழுத்துக்கள் எடுக்கவேண்டும் என்ற மூன்று உள்ளீடுகளை கொண்டுள்ளது.


AB
1V Sankara narayananSankar


Worksheet Formulas
CellFormula
B1=MID(A1,3,6)



யோசித்து பார்த்தால், LEFT இன் செயல்பாட்டையும் MID மூலமாக நிகழ்த்தலாம் என்பது தெரியும், cell இன் முதல் எழுத்தையே தொடங்கும் புள்ளியாய் கொண்டால் இது சாத்தியம்,


AB
2V Sankara narayananV Sankar


Worksheet Formulas
CellFormula
B2=MID(A2,1,8)



சற்றே மெனக்கெட்டால் RIGHT இன் செயல்பாட்டையும் MID மூலம் கொண்டுவரலாம், (இது கொஞ்சம் தலையைச்சுற்றி மூக்கை தொடும் வழி தான், அறிந்துகொள்வதற்காக மட்டுமே இதை எழுதியுள்ளேன், புரியாவிட்டால் மெனக்கெட வேண்டாம்)


AB
3Sankara narayanannarayanan
4Sankara narayananSankara narayanan


Worksheet Formulas
CellFormula
B3=MID(A3,LEN(A3)-8,9)
B4=MID(A4,LEN(A4)-16,17)



இங்கு, LEN மூலமாக cell இன் எழுத்துக்களின் எண்ணிக்கையை அறிந்துகொள்கிறோம், அதாவது cell இன் கடைசிப்புள்ளிக்கு சென்றுவிடுகிறோம், பின், உள்நோக்கி தேவையான எழுத்துக்கள் - 1 பயணிக்கிறோம், இங்கு '-1' எதற்கென்று, இரண்டாவது உதாரணத்தை பார்த்தால் புரியும். செல்லில் 17 எழுத்துக்கள் இருக்கும் போது LEN(A4) = 17 கொடுக்கும், இதிலிருந்து 17 கழித்தால் 0 வரும், cell இன் தொடங்கு புள்ளி 1 என்பதால், Excel திட்டும் (#VALUE! Error).


குறிப்பு: சென்ற பதிவில் குறிப்பிடத்தவறிய ஒரு விஷயம், LEFT, RIGHT, MID போன்ற Text Functionகள் பயன்படுத்தும்போது, நீங்கள் கேட்கும் அளவு cell இல் எழுத்துக்கள் இல்லாவிட்டாலும், Excel திட்டாது, எவ்வளவு இருக்கோ அவ்வளவு எழுத்துக்களை தரும்.



AB
6SankarSankar
7SankarSankar
8SankarSankar


Worksheet Formulas
CellFormula
B6=LEFT(A6,100)
B7=RIGHT(A7,100)
B8=MID(A8,1,100)





2. SEARCH / FIND

ஒரு சொற்றொடரில் (String) மற்றொரு சொற்றொடர் (Sub-String) இருக்கிறதா என்பதை அறிவதற்கு SEARCH பயன்படுகிறது. தேடப்படும் சொற்றொடர் (Sub-string) ஓர் எழுத்தாகவோ, வார்த்தையாகவோ முழு வாக்கியமாகவோ இருக்கலாம். இந்த Function க்கு, தேடப்படும் சொற்றொடர் முதலாவதாகவும், தேடுதலுக்கு உட்படும் சொற்றொடர் இரண்டாவதாகவும் உள்ளிடாக அளிக்கவேண்டும்.


AB
14Excel 20032
15Excel 20037
16Excel 20031


Worksheet Formulas
CellFormula
B14=SEARCH("x",A14)
B15=SEARCH("2003",A15)
B16=SEARCH("Excel 2003",A16)



தேடப்படும் சொற்றொடரின் தொடங்குபுள்ளி, SEARCH Function தரும் விடையாக இருக்கும். தேடப்படும் சொற்றொடர் கிடைக்காதபோது , திட்டு (#VALUE Error) கிடைக்கும். தேடப்படும் சொற்றொடர் ஒருமுறைக்கு மேல் இருந்தால், முதல் முறை கண்டறியும் இடமே விடையாக கிடைக்கும்.


AB
18Excel 2003 is better than excel 20071


Worksheet Formulas
CellFormula
B18=SEARCH("excel",A18)



குறிப்பு: SEARCH ஒரு Case-insensitive Function ஆகும். அதாவது "Excel", "EXCEL","excel" எல்லாமே ஒன்றுதான். Case-sensitive ஆக தேடவிரும்பினால், FIND ஐ பயன்படுத்தலாம். SEARCH மற்றும் FIND இடையேயான ஒரே வேறுபாடு இதுதான்.


AB
20Excel 2003 is better than excel 200727


Worksheet Formulas
CellFormula
B20=FIND("excel",A20)




இதுவரை கற்ற LEFT, MID மற்றும் SEARCH ஐ பயன்படுத்தி ஒரு cell இன் முதல் வார்த்தையை மட்டும் பெறுவது எப்படி எனப் பார்க்கலாம்.


AB
22Excel 2003 is better than excel 2007Excel


Worksheet Formulas
CellFormula
B22=MID(A22,1,SEARCH(" ",A22)-1)



முதலில், முதல் வார்த்தை என்பதை எப்படி தீர்மானிப்பது? Cell இன் முதல் எழுத்திலிருந்து முதல் Space க்கு முந்தைய எழுத்து வரை உள்ள பகுதியை, முதல் வார்த்தை எனக்கொள்ளலாம். இப்போது MID function வழியாக இந்த கேள்வியை மதிப்பிடும் போது, Cell இன் முதல் எழுத்து MID இன் இரண்டாவது உள்ளீடாகிறது, முதல் Space ஐ கண்டறிய SEARCH ஐ பயன்படுத்தலாம். Space க்கு முந்தைய எழுத்தை குறிக்க -1 பயன்படுகிறது. இது MID இன் மூன்றாவது உள்ளீடாகிறது.


D
22=MID(A22,1,SEARCH(" ",A22)-1)
23=MID(A22,1,6-1)
24=MID(A22,1,5)
25="Excel"




cell இல் Space இல்லாத போது இந்தமுறை திட்டு வாங்கித்தரும். இதனை தவிர்க்க நாமே ஒரு Space ஐ சேர்த்து கொள்ளலாம்.


AB
27SankarSankar


Worksheet Formulas
CellFormula
B27=MID(A27,1,SEARCH(" ",A27 & " ")-1)



இந்த முறையில், முன் சொன்ன குறிப்பு எப்படி பயன்பட்டுள்ளது என்பதை சோதித்து அறியுங்கள்.

cell இன் கடைசி மற்றும் நடுவிலிருந்து ஒரு வார்த்தையை பெறுவது எப்படி என மற்றொரு பதிவில் பார்க்கலாம்.


நன்றி
சங்கர்

5 comments:

சுசி said...

//Excel திட்டும் //

இங்கேயும் திட்டா..

நல்ல பதிவு சங்கர்.

sayavanam said...

formula rqd for hh:mm:ss to minutes roundes
ie 01:21:01 result 82 minutes

sayavanambc@gmail.com

sayavanam said...

formula rqd for hh:mm:ss to minutes roundes
ie 01:21:01 result 82 minutes

sayavanambc@gmail.com

sayavanam said...

formula rqd for hh:mm:ss to minutes roundes
ie 01:21:01 result 82 minutes

sayavanambc@gmail.com

sayavanam said...

formula rqd for hh:mm:ss to minutes roundes
ie 01:21:59 also result 82 minutes

sayavanambc@gmail.com

Post a Comment