பள்ளி இறுதிவரை தமிழ்வழியிலேயே கற்றிருந்தபோதும் கலைச்சொல்லாக்கம் தடுமாற்றமானதகவே உள்ளது.
எனக்கு தெரிந்த சில சொற்களை இங்கு தந்திருக்கிறேன், தமிழாக்கம் தேவைப்படும் சொற்களையும் இணைத்திருக்கிறேன்.
இச்சொற்களில் எதற்கும் பொருத்தமான தமிழ்ச்சொல்லோ, Excel சம்பந்தப்பட்ட வேறு சொற்களோ
நீங்கள் அறிந்திருந்தால் பின்னூட்டத்தில் எழுதிச்செல்லும்படி வேண்டுகிறேன்

Wednesday, December 2, 2009

சில சொற்றொடர் (Text) Functionகள்

Excel இல் Text Functions என்னும் வகைப்பாட்டின் கீழ் பல Functionகள் உள்ளன. இவற்றில் CONCATENATE, LEN, PROPER ஆகியவற்றை முதல் நிலை Functionகளாகவும், LEFT, RIGHT, MID, EXACT போன்றவற்றை இரண்டாம நிலையாகவும், SEARCH, REPLACE, TEXT போன்றவற்றை மூன்றாம் நிலையாகவும் வகைப்படுத்தலாம். முதல் மற்றும் இரண்டாம் நிலை Function கள் சிலவற்றை இப்பதிவில் காண்போம்.

1. CONCATENATE

ஒன்றுக்கு மேற்பட்ட சொற்றொடர்களை ஒன்றாய் இணைப்பதற்கு பயன்படும் CONCATENATE, Excel பயனர்களில் பலர் முதன்முதலாய் கற்கும் Functionகளில் ஒன்று. இணைக்க வேண்டிய சொற்றொடர்கள் cell content ஆகவோ, string constant ஆகவோ இருக்கலாம்
(எகா)


ABCD
2Input 1Input 2ResultInput type
3SankaraNarayananTwo String constants
4SankaraNarayananSankaraNarayananTwo Cell contents
5SankaraNarayananSankara NarayananTwo Cell contents and a constant


Worksheet Formulas
CellFormula
C3=CONCATENATE("Sankara","Narayanan")
C4=CONCATENATE(A4,B4)
C5=CONCATENATE(A5," ",B5)




CONCATENATE Function ஐ SUM Function உடன் ஒப்பிடலாம், ஆனால் CONCATENATE இன் மிக முக்கிய குறைபாடு, இணைக்க வேண்டிய Cell கள் ஒவ்வொன்றையும் தனித்தனியே குறிப்பிட (Refer) வேண்டும்.

ABC
192Hari
231Sankara
385Narayanan
444Venkatesan
522RVS
6
7274HariSankaraNarayananVenkatesanRVS


Worksheet Formulas
CellFormula
A7=SUM(A1:A5)
C7=CONCATENATE(C1,C2,C3,C4,C5)



ஏனோ தெரியவில்லை MS இப்படி ஒரு குறையை விட்டுவைத்திருக்கிறது. இதனை VBA துணை கொண்டு நமது சொந்த Function உருவாக்கி நிவர்த்தி செய்வது எப்படின்னு அப்புறம் சொல்றேன்.

CONCATENATE இன் செயல்பாட்டை '&' Operator மூலமாகவும் செயல்படுத்தலாம்

I
2Sankara
3Narayanan
4Venkatesan
5
6SankaraNarayananVenkatesan


Worksheet Formulas
CellFormula
I6=I2&I3&I4



2. LEN
ஒரு Cell இல் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையை கண்டறிவதற்கு LEN function ஐ பயன்படுத்தலாம். இந்த எண்ணிக்கை எழுத்துக்கள், Space, Line break, non-breaking போன்ற non-printable ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

3. LEFT, RIGHT
ஒரு Cell இல் இடதுபுறமிருந்து நமக்கு தேவையான எழுத்துக்களை வெட்டி எடுக்க LEFT function பயன்படும், வலதுபுறமிருந்து எழுத்துக்களை பெற RIGHT உதவும்.

AB
1Sankara narayananSankar
2Sankara narayanannarayanan


Worksheet Formulas
CellFormula
B1=LEFT(A1,6)
B2=RIGHT(A2,9)



மூன்று அடிப்படை Function கள் குறித்து சொல்லியாகிவிட்டது. இப்போது பயன்பாடு.

1. நோக்கம் (Aim) : ஒரு Cell இன் முதல் எழுத்தை தவிர்த்து பிற எழுத்துக்கள் அனைத்தையும் பெறுவது
Cell இல் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை நிலையாக (Fixed) இருக்கும்போது RIGHT function மூலம் எளிதாக இதனை செய்யலாம், எழுத்துக்களின் எண்ணிக்கை தெரியாத நிலையில் எப்படி செய்வது?

இதனை நாம் இரு செயல்களாக பிரிப்போம், முதலில் தெரியாத விஷயமான எழுத்துக்களின் எண்ணிக்கையை அறிவோம், இரண்டாவதாக இந்த எண்ணிக்கையை RIGHT உடன் பயன்படுத்தி நமக்கு தேவையான எழுத்துக்களை பெறலாம்

AB
4VSankarSankar


Worksheet Formulas
CellFormula
B4=RIGHT(A4,LEN(A4)-1)



இந்த Formula வை படிப்படியாக மதிப்பீடு (Evaluate) செய்யும்போது கீழ்காணும் முடிவுகளை காணலாம்

B
6=RIGHT(A4,7-1)
7=RIGHT(A4,6)
8="Sankar"





முதல் படியில், உள்ளிருக்கும் LEN எழுத்துக்களின் எண்ணிக்கையை (7) தருகிறது, அதிலிருந்து ஒன்றாய் கழிக்கக்அ நமக்கு தேவையான எழுத்துக்களின் எண்ணிக்கை (6) கிடைக்கிறது, இதனை RIGHT உடன் பயன்படுத்த எதிர்பார்த்த விடை கிடைக்கிறது.

இதுபோலவே LEFT பயன்படுத்தி Cell இன் கடைசி எழுத்து தவிர்த்து பிற எழுத்துக்களை பெறலாம்.

Cell இன் முதல் அல்லது கடைசி வார்த்தை மட்டும் வெட்டி எடுப்பது எப்படி என அடுத்த பதிவில் சொல்கிறேன்.

நன்றி
சங்கர்

9 comments:

நட்புடன் ஜமால் said...

மிக எளிமையாக்கியிறுக்கீங்க. தமிழ் படுத்தியிருப்பது இன்னும் சுகமாக இருக்கின்றது.

இன்று ஒன்றை கற்று கொண்டேன் என்ற மன திருப்தி அடைகிறேன்.

நன்றி - தொடர்க ...

cheena (சீனா) said...

அன்பின் சங்கர்

வெகு நாட்களாக எக்செல் கற்றுக் கொள்ள வேண்டுமெனெ நினைக்கிறேன் - முடியவில்லை

ஆரம்பிக்கிறேன் - பால பாடத்தில் இருந்து ஆரம்பிக்கிறேன்

அன்பின் சங்கர்

நன்றி கலந்த நல்வாழ்த்துகள்

Nathanjagk said...

அன்பு சங்கர்,
மிக உபயோகமான கமாண்ட்கள்!

கன்காடிநேட்.. வார்த்தை விளையாட்டில் அதிகம் பயன்படும் ஒரு யுக்தி! கன்காடிநேட் வார்த்தைகளை ஒட்டப் பயன்படுகிறது (இதன் ஆகச்சிறந்த பயன் ஒன்று உண்டு; ஆமாம் எக்ஸெலில் காம்பவுண்ட் இன்டக்ஸ் பயன்பாடு அது!​ரெட்டைத் தலைவலி நிவாரணம்!!) ​லெப்ட், ​ரைட், மிட் ​போன்றவை ​வெட்டப் பயன்படுகிறது.
எப்ப நாம வார்த்தைகளை ஒட்டணும், வெட்டணும் என்ற​தேவைகளை ஆராய்வதே இந்த கமாண்ட்களை நம் ஸ்மரணையில் நிறுத்தும்.
உ.ம்.:
காலம் Aவில், குவாட்டர் உள்ளது (உடனே ஊறுகாயைத் தூக்காதீங்க.. நான் ​சொல்றது காலாண்டு கணக்கு) காலம் Bயில் வருடம் உள்ளது.
இரண்டையும் ஒன்றாக ஒரே காலத்தில் Q#-YY என்ற அமைப்பில் கொண்டுவந்தால் பிவட், கிராஃப் ​வேலைகளுக்கு சுலபமாக இருக்கும். அல்லவா?

இதுதான் வார்த்தை ஒட்டல்!

எக்ஸலில் காம்பவுண்ட் இன்டக்ஸ் பயன்பாடு - கன்காடிநேட் பங்ஷன் மூலமாக.. என்று ஒரு ​டெக்னிக் இருக்கிறது. ஆர்வமிருந்தால் ​சொல்லுங்கள் - நிச்சயம் எழுதுகிறேன்.

சங்கர் said...

வாங்க ஜமால், சீனா

ஒரு வரிசையாக இல்லாமல், கொஞ்சம் குறுக்குமறுக்காக தான் எழுதலாம் என்றிருக்கிறேன், தொடர்ந்து வாங்க

சங்கர் said...

வாங்க ஜகன், தெரிந்துகொள்ள ஆர்வம் நிச்சயமாய் இருக்கிறது, Author invite அனுப்பி இருக்கிறேன், ஏற்றுக்கொள்ளுங்கள்

சுசி said...

படிச்சாச்சு... இனி பயிற்சி பண்ணனும்.

ராசு said...

UseFul Tips

M.G.ரவிக்குமார்™..., said...

நட்புமிகு சங்கர்!.....

பிவோட் டேபிள் பற்றி கொஞ்சம் விளக்குங்களேன்!

Venkatarajulu V Krishnan said...

Dear sir

i want lean access. please help in simple way.

thanks advance

rajulu
mumbai

Post a Comment