நண்பர் ஜெகநாதன் Excel பயனர்களின் படிநிலைகள் குறித்த என்னுடைய பதிவிற்கு நீண்டதொரு பின்னூட்டமிட்டிருந்தார். முதலில் அவருக்கு நன்றி. அவர் குறிப்பிட்டிருக்கும் விஷயங்களின் ஆழமும் அளவும் ஒரு தனி பதிவாக எழுதும் அளவில் இருப்பதால் இப்பதிவு,
"இதே போன்ற பயன்பாட்டாளர் அளவுகோலை வேறொரு பக்கம் படித்திருந்தேன் (User, Power user, VBA Developer, Excel Developer and Professional Excel Developer இப்படியாக - உங்களின் வகைப்படுத்தலும் நன்றாகயிருக்கிறது."
நானும் இதுபோன்றதொரு வலைப்பக்கத்தை அடிப்படையாக கொண்டு, எனக்கு தோன்றிய சில விஷயங்களை சேர்த்துத்தான் இப்பதிவை எழுதினேன்.
"எனக்குத் தோன்றுவது,முதல் இரண்டு நிலை பயன்பாட்டாளர்களும் எக்ஸெலின் அனைத்து வகையான formatting, range / worksheet / workbook navigation, data abstraction, interpretation, charting, formulae என்று இவைகளின் பயன்பாட்டின் அளவில் மட்டும் (அனுபவ அறிவு + தொழில் தேவை) வித்யாசப்படுத்துக் கொள்ளப் படவேண்டியவர்கள். உ.ம். பிவட் டேபிள் பயன்பாடு தெரிந்தவுடன் ஒருவர் இன்டர்மீடியட் நிலைக்கோ அல்லது ஒரு மேக்ரோ எழுதியதும் பவர் யூஸராகவோ உயர்ந்து விட்டார் என்றும் சொல்ல முடியாது."
மிக நிச்சயமாக, நான் அப்பதிவில் குறிப்பிடத் தவறிய ஒரு விஷயம், 'ஒரு விஷயத்தை தெரிந்து கொள்வது என்பது, என்னளவில், அதன் நுணுக்கங்களை அறிவதையே குறிக்கும், (எ.கா) Pivot Table பற்றி தெரியும் என்று சொல்பவருக்கு, Calculated fileds பற்றியும் Row/Column வரிசைப்படுத்துவது (sorting) மற்றும் ஒருங்கிணைப்பது (Grouping) பற்றியும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
"எக்ஸெல் ஒரு ஓபன் ப்ளே க்ரவுண்ட்.. ஒரு data analysis-க்காக நீங்கள் மெனக்கெட்டு, மணக்கணக்கில் செய்த வேலையை எக்ஸெல் கொஞ்சம் சுலபமாக்கிக் கொடுக்கும். தொடக்கநிலைக்காரரை விட இடைநிலை பயன்பாட்டாளர் கொஞ்சம் சீக்கிரம் முடிப்பார்."
"ஆனால், இதே data analysis வேலை திரும்பவும் செய்ய வேண்டுமானால்.. திரும்பவும் மணிக்கணக்கு.. மெனக்கெடல்! இந்த புள்ளியில்தான் தொடக்க / இடைநிலை பயனர்களுக்கு கொட்டாவி, கோபம், இன்னோவேஷன், ஆட்டோமேஷன், ரெஸிக்னேஷன் போன்ற +வ் / -வ் எண்ணங்கள் உதிக்கின்றன. இதிலிருந்து அவர்கள்.. மேக்ரோ, விபிஎ என்று தேடி ஒரு புள்ளியில் நம்மால ஆவாதுடா சாமீ என்று 'ஒரிசினல்' விபிஎ டிவலப்பரை அடைகிறார்கள்"
இந்த தேடலையே தொடக்க மற்றும் இடை நிலையினருக்கான வேறுபாடாய் நான் காண்கிறேன். போதுமென்ற மனம் உடையவர்களாக இருக்கும் தொடக்கநிலை பயனர்கள் அதிலிருந்து வெளிவருவதே இல்லை. Excel இல் ருசி கண்டுவிட்ட எவரும் அத்தனை விட்டு விலகுவது மிக கடினமென்றே கருதுகிறேன். கற்பதற்கு ஆர்வமற்ற சிலர் தான் நீங்கள் குறிப்பிட்ட முடிவுகளை நோக்கி செல்வார்கள். பெரும்பாலான நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதர்ர்க்கு உயர்நிலை பயனர்கள் இருவரே போதும், விதிவிலக்காய் சில இடங்களில் தான் VBA Developer பணியாற்ற வேண்டிய தேவை இருக்கும்.
"நல்ல விபிஎ டிவலப்பர் (எனக்கு தோன்றுவது):
1. மூளையைக் கசக்கி முறுக்கு சுடுவது எப்படி என்று கண்டுபிடிக்கக் கூடாது (don't reinvent wheel)
2. திரும்ப பயன்படுத்துகிற மாதிரியான பாகங்கள் அமைக்கத் தெரிய வேண்டும் (reusable)"
மிக நிச்சயமாய் ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம், Excel ஒரு முழு வளர்ச்சியடைந்த மென்பொருள் (matured software), பெரும்பாலான கேள்விகளுக்கான பதில்கள் அங்கேயே இருக்கும், தேடி எடுத்து பயன்படுத்துவது எப்படி என்பது தான் நாம் அறிந்துகொள்ள வேண்டிய விஷயம்.
"3. அசல் டேட்டாபேஸுடன் SQLலாக உரையாடத் தெரிந்திருக்க வேண்டும் (எப்போதும் இந்த எக்ஸெல் ஸ்பரட்ஷீட்டின் ஆதிமூலம் ரிஷிமூலம் எது என்ற கேள்வி இருந்துக்கிட்டே இருக்கணும்)"
இந்த இடத்தை நான் இன்னும் தொடவில்லை, கற்று அறிந்தபின் கருத்து சொல்கிறேன்.
"4. முக்கியமா எக்ஸெல் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும் (விபிஎ-வில் Vlookup, Match பயன்படுத்துவதற்கு வித்தியாசம் என்ன என்கிற மாதிரி - அதிமுக்கியமா Vlookup-ங்கிற function இருக்குன்னு தெரிஞ்சிருக்கணும்)"
இந்த வித்தியாசம் என்ன என்பதை சொன்னால் தெரிந்து கொள்ள ஆவலை இருக்கிறேன்.
"5. ஒரு நிலையில்.. இந்த வேலைக்கு எக்ஸெல் ஆவாது.. MS-Access பக்கம் கரை ஒதுங்கிறதுதான் ஸேப்டி என்று முடிவெடுக்கத் தெரிந்திருக்க வேண்டும் (நீங்கள் எவ்வளவு ப்ரோக்கிராமிங் பண்ணினாலும் எக்ஸெலை ஒரு டேட்டாபேஸாக
மாத்தவே முடியாதுங்க - எக்ஸெல் எக்ஸெல்தான்)"
Excel ஐ database ஆக பயன்படுத்துவது தான் மிக மோசமான தவறுகளில் (abuse) ஒன்றேன்பதே என் கருத்தும். ஆனால் data analysis எனும்போது முதலில் நிற்பதும் தன்னிகர் அற்றதும் Excel தான்.
"இது இருக்கட்டும்.. உங்களின் சர்வே அடிப்படையில் நீங்கள் ஒரு முடிவுக்கு இந்நேரம் வந்திருப்பீர்கள். இதை அறிய ஆவல். அதாவது, உங்களின் இலக்கு, Excel 2007 பயனர்களா? அல்லது 2003?"
கடந்த எட்டு மாதங்களாய் 2007 பயன்படுத்தி வந்தாலும், இதுவரை நான் 2003 பயனர் தான், இன்னும் சொல்லப்போனால் 2007 எனக்கு பிடிக்கவில்லை. நான் எழுதும் விஷயங்கள் பெரும்பாலும் 2003 ஐ மையப்படுத்தியே இருக்கும் எனினும் தேவைப்படும் இடங்களில் 2007 குறித்தும் சொல்லலாம் என்றிருக்கிறேன்.
"எந்த மாதிரியான பயன்பாட்டாளர்களை கருத்தில் கொண்டு எழுதப்போறீங்க? சிலருக்கு cell formatting, conditional formatting, Auto filter என்றெல்லாம் விளக்கினால் ஹாவ்வ்வ் வந்திரும்; அதற்கென்று ஆரம்பத்திலேயே விலுக்அப், யூஸர் டிபைன்ட் பங்கஷன், க்ளாஸ் மாட்யூல் என்றால் பின்னூட்டம் போட ஆளிருக்காது. அதுக்குத்தான் கேக்கிறேன் உங்கள் நிலைப்பாடு என்ன? ஆர்வத்துடன் நன்றி!"
நான்கு ஆண்டுகளுக்கு முன் முதல் முதலாய் excel இல் வேலை செய்ய சந்தர்ப்பம் வாய்த்தபோது எனக்கு தெரிந்த Functions இரண்டே தான். அவை SUM மற்றும் IF . இன்றைய நிலையில் என்னை நான் மேல்நிலை பயனாளன் என்றே மதிப்பிடுவேன். இந்த நான்காண்டுகளில் நான் எவ்வழியில் கற்றேனோ அந்த வழியிலேயே மற்றவர்களை அழைத்துச்செல்லலாம் என்றிருக்கிறேன்.
மீண்டும் ஒருமுறை, உங்கள் வருகைக்கு நன்றி. தொடர்ந்து வரவேண்டுமென்றும் கருத்துக்கள் சொல்லவோ தவறுகள் ஏதும் வந்தால் சுட்டிக்காட்டவேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
சங்கர்
21 comments:
//போதுமென்ற மனம் உடையவர்களாக இருக்கும் தொடக்கநிலை பயனர்கள் அதிலிருந்து வெளிவருவதே இல்லை.//
அதே அதே...
அருமை சங்கர்...
பதில்களின் ஒரு வெளிப்படையான தன்மை தெரிகின்றது.
இன்று மதியம் முதல் மண்டைய உடைச்சு தேடிகிட்டு இருக்கேன்..
Text form இருக்கிற field ஐ எப்படி Number format க்கு மாற்றுவது... The number filed was taken as text field when it was imported from our payroll program.
எப்பவோ பண்ணியிருக்கேன்.. ஞாபகம் வரமாட்டேங்குது.
நான் உபயோகிப்பது Excel 2007
My email id : raghavannigeria@gmail.com
இரண்டு நாட்களுக்கு முன்பு openoffice.org டவுன் லோட் பண்ணி போட்டு இருக்கேன். இதுவும் நல்லா இருக்கு. நேரம் கிடைக்கும் போது முயற்சி செஞ்சு பாருங்களேன்.
நான் க்ற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கு - நேரம் தான் இல்லை - விரைவில் கற்றுக் கொள்கிறேன் - நன்றி கலந்த நல்வாழ்த்துகள் சங்கர்
Text வடிவில் இருக்கும் எண்களை மாற்ற சில எளிய வழிகள்,
1. Column தேர்வு செய்து Data -> Text to Column (Alt + D + E) சென்று முதல் Dialogue box இல் Finish Click செய்யலாம்
2. ஒரு வெற்று Cell copy செய்து Data select செய்து Right click -> Paste special -> Values & Add option தேர்வு செய்து OK clickசெய்யலாம்
வீட்டில் 2007 இன்னும் நிறுவவில்லை எனவே 2003 Menu அடிப்படையில் Short cut கூறியிருக்கிறேன்,
Openoffice மென்பொருளை நானும் பதிவிறக்கி வைத்திருக்கிறேன், நிறுவி முயன்று பார்க்கிறேன்
//சுசி said...
//போதுமென்ற மனம் உடையவர்களாக இருக்கும் தொடக்கநிலை பயனர்கள் அதிலிருந்து வெளிவருவதே இல்லை.//
அதே அதே...//
வாங்க சுசி
வாங்க சீனா, நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் கற்றும் கற்பித்தும் கொள்ளவேண்டிய பல இருக்கின்றன, இணைந்து கற்போம்
//Text form இருக்கிற field ஐ எப்படி Number format க்கு மாற்றுவது... The number filed was taken as text field when it was imported from our payroll program.//
நான் பயன்படுத்தும் ஷார்ட்கட்:
1. எங்காவது ஒரு செல்லில் 0 டைப் செய்து கொள்க
2. அந்த பூஜ்ஜியத்தை காபி செய்க
3. எண்களாக மாற்ற வேண்டிய செல்களை செலக்ட் செய்க
4. Paste Specials சென்று Add ஆப்ஷனை கிளிக்கி விட்டு Ok கொடுக்கவும்
எழுத்து எண்ணாகிவிடும்
நானும் 2003 பயனர்தான்.. 2007-யை சாம் ஆண்டர்சன் ரேஞ்சுக்கு லவ்வுகிறேன்!!
தெளிவாக இருக்கின்றது விளக்கங்கள்.
உதாரணங்கள் மூலம் நீங்கள் பாடத்தை துவங்குங்கள்
சரியாக ஒரு நாள் வையுங்கள் - ஏதேனும் ஒரு தேதி, தங்கள் பதிவினை நாங்கள் தேடி வந்து பார்ப்பதற்கு ஏதுவாக.
ஆவலோடு காத்திருக்கின்றோம் கற்பதற்கு ...
நல்ல தகவல்கள். கற்றது கை மண் அளவு. கல்லாதது உலக அளவு.... வாழ்த்துக்கள்! தெரியாததை தெரிந்து கொள்ள உங்கள் எக்ஸல் பக்கங்கள்... இருக்கவே இருக்கு. வாழ்த்துக்கள்!
ஜிஆர்ஜி
புதுவை
அன்பு சங்கர்,
நம் இருவரின் நிலைப்பாடும் இத்தளத்தில் ஒத்திசைக்கின்றன என்பதை உணர்கிறேன். பொதுவான கருத்து, நிலையான கொள்கை, அணுசுரணையான நடத்தை இவைகளினாலேயே கனவுகள் கைவசமாகின்றன.
கற்றது EXCELல் உங்கள் அணுகுமுறை என்னைக் கவர்கிறது. நிதானமான தேவையானதை மட்டும் தெளிவாக தரும் எண்ணம் பாராட்டுக்குரியது. இதற்கு வரும் பின்னூஸ் மற்றும் ஆதரவு EXCELன் வியாபார ரீதியான தாக்கத்தை உறுதி செய்கிறது. பயனளிக்க கூடிய விதமாக செயல்பட வாழ்த்துக்கிறேன்.
எனக்கும் இதுபோன்ற ஒரு தளம் அமைக்க வேண்டுமென்ற ஆசையிருந்தது.. எக்ஸெல், அக்ஸஸ், இன்பர்மேஷன் விஷுவலைசேஷன் என்பது மாதிரியாக (ஆனா இப்போ பிளாக் எழுதி மொக்கையா போட்டுக்கிட்டிருக்கேன்!) உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்!
ஒரு நல்ல பயணமாக இது அமைய வேண்டுகிறேன். பயனர்களை கருத்தில் கொண்டு எளிய தமிழில் எழுதணும்.
எனக்கு தோன்றும் சில யோசனைகள் இங்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்:
1. Top down, bottom up என்று 2 விதமான அணுகுமுறைகளை வடிவமைப்பியலில் பார்க்கலாம். இங்கும் இதை ஏன் நாம் முயற்சிக்க கூடாது?
ஆரம்பநிலை பயனர்களுக்காக ஒரு பாடத்திட்டம் (bottom up), வல்லுநப் பயனர்களுக்காக வேறொரு பாடத்திட்டம் (top down). ஒரு புள்ளியில் இரண்டும் இணையும்.
2. கேள்விகள், சந்தேகங்கள் நிறைய வரும் என்று நம்புகிறேன்.. அதற்கென்று ஒரு பகுதியை கற்றது EXCELல் ஓபன் செய்தால்.. அப்புறம் இது discussion forum-ஆக மாறிவிடும் ஆபத்து உண்டு. முழுமையான கற்றுக் கொள்ளும் ஆவல் மறைந்து, இப்போதைக்கு இந்த சட்னிக்கு ஒரு வடை கிடைச்சா போதும் என்கிற கதியில், நம் கேள்விக்கு விடை வந்தாச்சு என்று எஸ்கேப்பி விடுவார்கள். யோசிக்கவும்!!!
3. ஒற்றை ஆளாக சிறப்பாக செயலாற்ற முடியும் என்பதும் ஒருவகையில் நல்லதே. ஒருவர் எண்ணப்படி ஒத்திசைவான போக்கு கிடைக்கும். இருந்தும், து(இ)ணையாசிரியர்கள் சேர்த்துக் கொள்வதும் குழுவாக செயல்படுவதும் பாதகமாகாது என்று தோன்றுகிறது.
4. எளிமையான டெமோ ப்ராஜெக்ட் கொண்டு பாடத்திட்டம் அமைப்பது நல்லது. முக்கியமாக, பாடத்திட்டத்தை வடிவமைப்பில் நிறைய கவனம், களப்பணி, ஆய்வு மேற்கொள்ளவது உத்தமம் என்று நினைக்கிறேன். EXCEL சொல்லித்தருகிறேன் என்று வருகிற சில புத்தகங்களைப் பார்த்தால் அவ்வ்வ் வருகிறது எனக்கு. எக்ஸெலில் இருக்கும் கமாண்ட்களை அப்படியே பட்டியலிடுவது, அதன் விபரங்களை அளிப்பது மட்டுமே கொண்டிருக்கின்றன அவைகள். அதற்கு
F1 கீயை அழுத்தினாலே போதுமே.. எக்ஸெலே தந்துவிடும்.. புத்தகம் எதற்கு? நான் சொல்ல விழைவது ஒரு தகுந்த எடுத்துக்காட்டுடன் (ட்ரான்ஸ்போர்டேஷன் நிர்வாகம், கார்பரேட் ஸ்கோர்கார்டு, மெட்ரிக் இந்தமாதிரி) வழிநடத்திச் சென்றால், ஒரு பெரிய வேலையை முடித்த திருப்தியோடு கற்றுக் கொண்ட பலனும் கிட்டும். அல்லவா?
5. முன்னேறிய பயனர்களுக்கான பயிற்சி என்பது கத்திமேல் நடப்பது போல.. எதை அட்வான்ஸ்டு என்று நாம் நினைக்கிறோமோ அது அவர்களுக்கு ப்பூ என்பதாகத் தோன்றிவிடும்.. அப்படியே இது உல்டா அடிக்கவும் வாய்ப்புண்டு.. ஸோ.. மு.ப-வுக்கான பாடத்திட்டம், கேள்வி-பதில் முறையில் அல்லது பணி(தேவை) அடிப்படையிலான பயிற்சியாக அமைக்கலாம் என்பது என் விருப்பம்.
... இன்னும் இருக்கு!
இருந்தும் EXCESSஆக சொல்லிவிடுகிறேனோ என்ற தயக்கமும் இருக்கு. பிடித்த மைதானம் என்பதால் வந்த ஈர்ப்பு அவ்வளவே! நன்றி சங்கர்!
.... மிக தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன் சங்கர்!
//தொடக்க நிலை பயனருக்கும், இடைநிலையினருக்கும் இடையேயான மு க்கிய வேறுபாடுகளில் ஒன்றென நான் கருதுவது, Mouse vs Keyboard பயன்பாடு, இடைநிலையினர் எல்லாரும் Keyboard பயன்படுத்துபவர்களாக இருக்கவேண்டுமேன்பதோ, தொடக்க நிலையினர் மட்டுமே Mouse பயன்படுத்துபவர்கள் என்பதோ இதன் பொருள்லல்ல, ஆனால் keyboard பயன்படுத்துபர்களின் செயல்திறன் சிறிது அதிகமென்றே என் அனுபவத்தில் (அதிகமில்லை எனினும்) கண்டிருக்கிறேன்//
மிகச்சரி! இந்த இடத்தில் தான் EXCEL 2007ன் மேல் எரிச்சல் வருகிறது. Tool Ribbon என்ற பெயரில் கீபோர்ட் ஷார்ட்கட்-களுக்கு புதைகுழி வெட்டிவிட்டார்கள் (நீங்கள் பழைய ஷார்ட்கட் கீகளை அமுத்தியும் பங்ஷனை கொண்டுவரலாம் இருந்தும் அது ஏனோ மனக்கணக்கு போடுவது மாதிரி சிரமமாக இருக்கிறது) சுருக்கமாக EXCEL 2007, பார்க்க சிலுசிலுவென இருக்கிற ஒரு பம்மாத்து. மவுஸை மையமாக கொண்டு செயல்படும் ஒரு அப்ளிகேஷனாகத் தோன்றுகிறது. அதாவது aesthetically good, ergonomically the worst!
சங்கர், ஜெகநாதன், மிக நன்றி. கொஞ்சம் கொஞ்சமாக தயார் செய்கிறீர்கள் எங்களை. வாழ்த்துக்கள்.
வணக்கம் நண்பரே
தங்களின் பதிவுக்கு நன்றி.
Excel லில் எப்படி சார்ட்ஸ் (charts ) உபயோகிப்பது என்று விளக்க முடியுமா ?
உதாரணமாக
இந்த மாதம் 500
அடுத்த மாதம் 1000
அடுத்து 1250
இதை எப்படி சார்ட்டில் கொண்டுவருவது ?
நன்றி.
ஆனந்த்.
நண்பர்களுக்கு,
மிக அருமையான பாடங்கள். எளிமையான விளக்கங்கள். நன்றி.
Middle levelல் இருப்பவர்களுக்கும் விரைவில் பாடங்கள் தருவீர்கள் என்று நம்பிக்கையுடன்
- இ த ய ன்.
shankar ungal blog ilirunthu naan padithtawaikalai enethu blog il shemiththu waithullen. copy adiththal enru ninaikka wendaam.
ungal reference iyum kurippittullen
Post a Comment