பள்ளி இறுதிவரை தமிழ்வழியிலேயே கற்றிருந்தபோதும் கலைச்சொல்லாக்கம் தடுமாற்றமானதகவே உள்ளது.
எனக்கு தெரிந்த சில சொற்களை இங்கு தந்திருக்கிறேன், தமிழாக்கம் தேவைப்படும் சொற்களையும் இணைத்திருக்கிறேன்.
இச்சொற்களில் எதற்கும் பொருத்தமான தமிழ்ச்சொல்லோ, Excel சம்பந்தப்பட்ட வேறு சொற்களோ
நீங்கள் அறிந்திருந்தால் பின்னூட்டத்தில் எழுதிச்செல்லும்படி வேண்டுகிறேன்

Saturday, December 26, 2009

எட்டி எடுக்க (Look up) சில Functionகள் - 2

தரவுகள் ஒருங்கிணைப்பில் அதிகமாக பயன்படும் LOOKUP  Functionகள் வரிசையில், கடந்த பதிவில் MATCH பற்றி பார்த்தோம் இந்த பதிவில், அதற்கு நெருங்கிய சொந்தமான VLOOKUP குறித்து பார்க்கலாம். உள் நுழையும் முன், அட்டவணை என்பதன் வரையறை குறித்த இப்பதிவை படிக்காதவர்கள், படித்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

VLOOKUP

VLOOKUP ஐ MATCHன் நீட்சி எனக்கூறலாம், MATCH என்பது ஒரு பரிமாண அட்டவணை (List) மீது செயல்படும் ஒரு Function, VLOOKUP இரு பரிமாண அட்டவணை மீது செயல்படுவது.MATCH ஒரு மதிப்பு இருக்கும் இடத்தை (Position) சொல்கிறது, VLOOKUP தேடும் மதிப்பிற்கு தொடர்புடைய மற்றொரு மதிப்பை பெற்று தருகிறது.

VLOOKUP செயல்பாட்டை இப்படி வரையறுக்கலாம்,

"ஒரு அட்டவணையின் முதல் Column இல் ஒரு மதிப்பை தேடி, அது கண்டுபிடிக்கப்பட்ட Row வில் நமக்கு தேவையான Cell ஐ தருகிறது."

சற்றே விரிவாக பார்க்கலாம், முதல் கட்டத்தில், ஒரு இரு பரிமாண அட்டவணையின் முதல் Column இல் ஒரு மதிப்பை தேடுகிறது , உதாரணமாக 'Karthik' எனும் மதிப்பை கீழ்காணும் அட்டவணையில் முதல் Column இல் தேடலாம்,










இந்த முதல்கட்ட தேடல் Row எண் ஐந்தை கண்டுபிடிக்கிறது, இப்போது இருபரிமாண அட்டவணை, சுருக்கப்பட்டு ஒரு பரிமாண பட்டியலாக மாறுகிறது,








இந்த பட்டியலில் நமக்கு தேவையான Cell எண்ணைக்  குறிப்பிட்டால், நமக்கு விடை கிடைக்கும், உதாரணமாக நமக்கு Karthik ன் வயது தெரிய வேண்டுமென்றால், 3 என உள்ளிட வேண்டும்.

எனவே VLOOKUPக்கு நாம் தரவேண்டிய உள்ளீடுகள்,

1. எதை தேட வேண்டும் (LOOKUP value)
        தேடப்படும் மதிப்பு, ஒரு எண்ணாகவோ,  சொற்றொடராகவோ இருக்கலாம்,

சொற்றொடர்களை நேரடியாக பயன்படுத்தும்போது (String constant) மேற்கோள் (" ") குறியீட்டினுள் தர வேண்டும், (எகா) "Karthik", எங்களுக்கும், Cell Referenceக்கும்  இது அவசியமில்லை (எகா) 45, A1

E
F
3
karthik
38
4
37
5
Meera


Worksheet Formulas
Cell
Formula
F3
=VLOOKUP(E3,B2:C6,2,0)
F4
=VLOOKUP("meera",B2:C6,2,0)
F5
=VLOOKUP(96009,A2:C6,2,0)



2. எங்கு தேட வேண்டும் (LOOKUP table)
        தேட வேண்டிய இடம் என்பது, தேடப்படும் Column ஐ முதலாவதாக கொண்ட ஒரு அட்டவணை, இது ஒரு முழு அட்டவணையாக இருக்கவேண்டிய அவசியமில்லை, ஒரு பெரிய அட்டவணையின் பகுதியாக இருக்கலாம். உதாரணமாக, கீழ்காணும் அட்டவணையில்  (A1 : C6) "Karthik" வயதை கண்டறிவதற்கு, நாம் (B2 : C6) என்ற உள் அட்டவணையை தேர்வு செய்ய வேண்டும், Excel ஐ பொறுத்தவரை A1 : C6 தான் அட்டவணை என்றபோதும், VLOOKUP ஐ பொறுத்தவரை B2 : C6 ஒரு முழுமையான  அட்டவணை தான்



3. தேடப்படும் மதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட Rowவில், எந்த cell வேண்டும்
      
தேடப்படும் Column ஐ 1 எனக்கொண்டு, அதன் வலதுபுறமுள்ள Columnகளை எண்ணிட்டால், நமக்கு தேவையான தரவு இருக்கும் Cell கிடைக்கும்.

4. தேடும் முறை
       MATCH இல் குறிப்பிட்டது போலவே, Exact matching மற்றும் தேடப்படும்  மதிப்பிற்கு அடுத்த  (சிறிய) மதிப்பை பெறவுமாக, இரண்டு வழிகளில் தேடலாம். Exact Match முறையில் தேட 0 அல்லது FALSE உள்ளீடாகதரவேண்டும்.

(எகா)
முந்தைய அட்டவணையில் "Karthik"ன் வயதை கண்டறிய கீழ்க்காணும் Formula பயன்படும், 

E
F
3
karthik
38


Worksheet Formulas
Cell
Formula
F3
=VLOOKUP(E3,B2:C6,2,0)



மீண்டும் மீண்டும் தேடும் Column முதலாவதாக இருக்க வேண்டும்  என்று கூறுவதன் காரணம்,  VLOOKUP வலதுபுறம் மட்டுமே பார்க்கும் Function. மேலே உள்ள அட்டவணையில் கீழ்காணும் Formula பயன்படுத்தி "Karthik"ன் "Emp No" கண்டறிய முடியாதா, என கேட்பவர்களை நான் சந்தித்திருக்கிறேன்.  

E
F
3
karthik
#N/A


Worksheet Formulas
Cell
Formula
F3
=VLOOKUP(E3,A2:B6,-2,0)



VLOOKUP, MATCH இன்னும் பெரும்பான்மையான  Excel Functionகள் பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களை ஒன்றாகவே பார்க்கும் (Case insensitive)

  VLOOKUP, MATCH பற்றி தெரிந்து கொண்டாயிற்று, அடுத்த பதிவில் இவற்றை எப்படி இணைத்து பயன்படுத்துவது என பார்க்கலாம்.

நன்றி
சங்கர்

11 comments:

கலகலப்ரியா said...

தமிழும் எக்ஸ்செல்லும் சேர்ந்தோ என்னமோ... தலை ரொம்ப சுத்துது சங்கர்... ஆனா உழைப்பு தெரியுது...! கிரகிக்க முயற்சி பண்றேன்..!

cheena (சீனா) said...

அன்பின் சங்கர்

உழைப்பும் ஆர்வமும் பாராட்டுக்குரியவை - நிச்சயம் பலர் முன்னேறுவர் பயன்பாட்டில்

நல்வாழ்த்துகள்

நட்புடன் ஜமால் said...

VLOOKUP வலதுபுறம் மட்டுமே பார்க்கும் Function.

இது புது விடயம் எனக்கு.

நன்றி.

கண்ணா.. said...

நல்ல பதிவு சங்கர்.

கலகலபிரியாவின் கருத்தை ஆமோதிக்கிறேன். அற்புதமான பதிவு எழுத்துநடையில் சற்று அயர்ச்சியை தருகிறது.

எழுத்து நடையில் சுவாரஸ்யசம் கூட்டுங்கள்.

சங்கர் said...

//கலகலப்ரியா said...

தமிழும் எக்ஸ்செல்லும் சேர்ந்தோ என்னமோ... தலை ரொம்ப சுத்துது சங்கர்... ஆனா உழைப்பு தெரியுது...! கிரகிக்க முயற்சி பண்றேன்..!//

//கண்ணா.. said...

நல்ல பதிவு சங்கர்.

கலகலபிரியாவின் கருத்தை ஆமோதிக்கிறேன். அற்புதமான பதிவு எழுத்துநடையில் சற்று அயர்ச்சியை தருகிறது.

எழுத்து நடையில் சுவாரஸ்யசம் கூட்டுங்கள்.//

எனக்கே கொஞ்சம் கண்ணக்கட்டதான் செய்யுது, இது கொஞ்சம் அடிப்படையான விஷயம் என்பதால் பாடம் மாதிரிதான் சொல்லவேண்டியிருக்கு, நடைமுறை பயன்பாடுகள் பற்றி சொல்லும் போது கொஞ்சம் எளிதாய் இருக்கும்னு நம்புறேன், இருந்தாலும் வரும் பதிவுகளில் நடையை மாத்த முயற்சிபண்றேன்

சங்கர் said...

//cheena (சீனா) said...

அன்பின் சங்கர்

உழைப்பும் ஆர்வமும் பாராட்டுக்குரியவை - நிச்சயம் பலர் முன்னேறுவர் பயன்பாட்டில்

நல்வாழ்த்துகள்//

நன்றி ஐயா

சங்கர் said...

//நட்புடன் ஜமால் said...

VLOOKUP வலதுபுறம் மட்டுமே பார்க்கும் Function.

இது புது விடயம் எனக்கு.//

தொடர்ந்து வாருங்கள், இன்னும் சொல்கிறேன்

நன்றி

SUFFIX said...

உபயோகமான தகவல்கள். வாழ்த்துக்கள் சங்கர்.

ஜெகநாதன் said...

அன்பு சங்கர்,
நல்ல இடு​கை.

ஆனாலும்.. விலுக்கப் பக்கத்தில் ​மேட்ச் பங்கஷ​னை ​வைத்துப் பார்க்க முடியவில்லை.
என்​னைக் ​கேட்டால், ​என் ஆட்டோமேஷன் ​தேவைகள் அதிகம் ​கேட்பது விலுக்கப் ​பயன்பாடுகள்தான்.. ஆனால் ஒன்று... நான் VBAவில் விலுக்கப் பயன்படுத்துவ​தேயில்லை. அது ​பெரிய ​ரோத​​ணை. ஏகத்துக்கும் ​நேரம் எடுத்துக் ​கொள்ளும். சிம்பிளாக Find பயன்படுத்திக் ​கொள்வேன்.
...
இந்த விலுக்கப் ​நேயர்களுக்காகத்தான் நான் முன்ன​மே ஒரு பதிவு எழுதியிருக்கி​றேன். விலுக்கப்பில் கன்காடினேட்டின் பயன்பாடு என்று.
ஏதாவது பிர​யோசனமாக இருந்ததா? யாருக்காவது??

Anonymous said...

மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி.

அழிப்பான் said...

nice.

Post a Comment